Spread the love

மாநாடு 20 June 2022

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூரை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தார்கள்.

இந்த படுகொலை செய்தவர்களை பிடிப்பதற்காக குடவாசல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர் இந்நிலையில் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டி நடுவர் நீதிமன்றத்தில் இந்த கொலையை தாங்கள் தான் செய்தோம் என்று கூறி 7 நபர்கள் நீதிபதி மகாராஜன் முன் சரணடைந்து இருக்கிறார்கள். சரணடைந்த 7 பேரில் பிரபாகரன், வெங்கடேஷ், தீபக், கணபதி,ரமேஷ் ,சாமிநாதன், ஆகிய 6 பேர் திருவாரூர் மாவட்டம் மணவாளநல்லூரை சேர்ந்தவர்கள் என்றும் மற்றொருவர் நாடா குடியை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்த படுகொலை பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவரை படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தோஷ் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் இருந்து சமீபத்தில் பிணையில் வந்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார் என்றும் சம்பவத்தன்று தன் வீட்டில் வளர்க்கும் நாயை பிடித்துக்கொண்டு தெருவில் நடந்து சென்றபோது சந்தோசை முன்விரோதம் காரணமாக இவர்கள் வெட்டி படுகொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

39550cookie-checkதிருவாரூர் அருகே படுகொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!