# மாநாடு ## Posts - [தஞ்சையை திணறடித்த போராட்டம், திரும்பிப் பார்க்குமா தமிழக அரசு](https://maanaadu.in/maanaadu-news-media-16/): மாநாடு 9 January 2026 தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது, அதன்படி இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பனகல் கட்டிடம் முன்பாக பெருந்திரளான மகளிர்கள் கூடி முழக்கங்கள் எழுப்பி, தரையில் அமர்ந்து போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அரசின் கவனத்தை ஈர்க்குமா? முதல்வரிடம் முறையிட வாய்ப்பளிப்பாரா? இப்பிரச்சனைகளை முடித்து வைப்பாரா? போராடியவர்கள் யார்? அவர்களின் கோரிக்கைகள் என்ன? அனைத்து தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங்கத்தினர் பெருந்திரளாக திரண்டு ஒன்று கூடி தஞ்சாவூரில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தார்கள் அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு : 1.   10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் எங்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். 2.   எங்களுக்கு வழங்கும் மாத ஊதியத்தை வட்டார அளவிலான கூட்டமைப்பிலிருந்து / நகர்ப்புற வாழ்வாதார மையங்களில் […] - [தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மிரட்டப்படும் நோயாளிகள். ஆக்சனில் இறங்குவாரா அமைச்சர்.](https://maanaadu.in/maanaadu-news-media-15/): மாநாடு 6 December 2026 தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கர்மவீரர் காமராஜரால் மக்கள் பயன்பெற கொண்டுவரப்பட்டு தஞ்சாவூர் சுற்றியுள்ள பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு நோய்வாய்ப்பட்டவர்களை கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்க்கிறார்கள். இங்கும் சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர்களால் அர்ப்பணிப்போடு, அக்கறையோடு கவனிக்கப்பட்டு குணம் பெற்று போகிறார்கள் என்பது எந்த அளவு உண்மையோ அதே சமநிகராக மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு மக்களுக்காக மக்கள் பயன்பெற பல திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தும் திட்டங்களை மக்களுக்கு போய் சேராத விதத்தில் தடுக்கும் சோரம் போன சில ஊழியர்களும் சில மருத்துவர்களும் இருப்பதால் ஏழை மக்கள் பல நேரங்களில் அவதியுறுகிறார்கள் என்பதும் உண்மை. இதற்கு யார் சான்று என்றால் நானே சான்று நான் சிகிச்சைக்காக போய் சேர்ந்த நேரத்தில் கூட எனது பெட்டில் இரண்டு பேர் படுத்திருந்தார்கள் என்னோடு சேர்த்து மூன்று பேர் என்பது […] - [திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான அரசாணை வெளியீடு](https://maanaadu.in/maanaadu-news-media-14/): மாநாடு 28 December 2025 தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சிகள் , திருவையாறு உட்பட 10  நகராட்சிகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை அரசாணை நேற்று வெளியானது அதன் விபரம் பின்வருமாறு; திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் என்றும், கன்னியாகுமரி, மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 10 புதிய நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விஏஓ அலுவலகமா இப்படி..](https://maanaadu.in/maanaadu-news-media-13/): மாநாடு 26 December 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் மோசமான நிலையில் கிராம நிர்வாக அலுவலகம் அச்சத்தில் மக்கள்..! பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சேதுபாவசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அபாய நிலையில் உள்ளது, இங்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியாற்றி வருகின்றனர், பல்வேறு சான்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தின் முன்புறமுள்ள சிலாப்பில் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. கட்டிடத்தின் உட்பகுதியிலும் விரிசல் உள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் அச்சத்துடனே வர வேண்டி நிலை உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் வருவாய் துறையும் விரைவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும், அல்லது புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டிதர வேண்டும் என ஊமத்தநாடு கிராம பஞ்சாயத்து […] - [தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25000 அபராதம், 2026 ஜனவரி 5ம் தேதி, ஆரம்பமே அமர்க்களம்...](https://maanaadu.in/maanaadu-news-media-12/): மாநாடு 26 December 2025 இந்தியாவில் வணிகம் செய்து வெள்ளையர்கள் இந்தியர்களை அடிமையாக்கிய காலகட்டத்தில் கூட களவு, கொள்ளை போகாத நிலை இருந்தது, ஆனால் இக்கால கட்டத்தில் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுரண்டல்கள் நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் அரசு பணியில் இருக்கும் அலுவலர்கள் சிலரைத் தவிர பலர் ஆண்டாண்டு காலம் அரசாள வந்த அரசர்கள் நாம் என்பது போல நினைத்துக் கொண்டு பொதுமக்களை அலட்சியப்படுத்துவதும், அலைய விடுவதும், அவர்களின் கோரிக்கை மனுக்களை, புகார் மனுக்களை புறந்தள்ளிவிட்டு யாராவது விவரம் தெரிந்தவர்கள் மேலும் சட்ட நுணுக்கங்களோடு அழுத்தம் கொடுத்து கேட்டால் அவர்களிடம் வேலை பளு சார், ரொம்ப கஷ்டப்படுகிறோம் சார் , எப்ப பாத்தாலும் மீட்டிங் சார் , அது இது என்று சாக்கு போக்கு சொல்லி கதை அளந்து விடுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டி வரும் பல அலுவலர்களும் பல அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதை பெரும்பாலானோர் பார்த்திருப்போம், காதில் […] - [100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கியதை கண்டித்து தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்](https://maanaadu.in/maanaadu-news-media-11/): மாநாடு 23 December 2025 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை எடுத்தது, மானிய நிதியை குறைத்தது உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றிய அரசை கண்டித்து தாளாண்மை உழவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது . ஒன்றிய மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு சட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பெயரை எடுத்தது, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை குறைத்து மாநிலங்களுக்கு நிதிச் சுமையை அதிகப்படுத்தியதை கண்டித்தும் இன்று மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தாளாண்மை உழவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் இயக்கத்தின் தலைவர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் துவக்கி வைத்தார். மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் […] - [#JustNow Result குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகள் அறிய லிங்க் இணைக்கப்பட்டுள்ளது](https://maanaadu.in/maanaadu-news-media-10/): மாநாடு 22 December 2025 குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை முடிவுகளை தெரிந்து கொள்ள இதோ link 🔗 https://www.tnpsc.gov.in/ - [நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் புகார், உயர்நீதிமன்ற உத்தரவு பரபரப்பு..](https://maanaadu.in/maanaadu-news-media-9/): மாநாடு 18 December 2025 இந்த மனுவைத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கையும் இதனுடன் இணைத்து, விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - [தஞ்சாவூர் மாநகராட்சியில் தன் பகுதி நோய் பரப்பும் விதத்தில் இருக்கிறது சுகாதார ஆய்வாளரின் ஒப்புதல் வாக்குமூலம். சட்டப்படி..](https://maanaadu.in/maanaadu-news-media-8/): மாநாடு 16 December 2025 ஒவ்வொரு மனிதனுக்கும் சுகாதாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை சாமானியர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் , அதைவிட அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள் மட்டுமே அப்பணிகளுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே பிரதானம் என்று செயல்பட்டு எந்த கடைகளில் , யாரிடம் ரசிது கொடுக்காமல் எவ்வளவு போடலாம் என்று எண்ணுபவர்கள் வேலைக்கு வந்தால் மனிதர்கள் உட்பட அங்கு வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் பெரும் துன்பம் ஏற்படும் என்பதை மெய்ப்பிக்கும் அதிகாரிகளின் வரலாறு பல உண்டு. தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்த சுகாதார அலுவலர் ஏ.ஜி. ரமேஷ், அவரோடு கூட்டாக இருந்து செயல்பட்ட எபின்.சுரேஷ் சுகாதார ஆய்வாளர், போன்றவர்களின் அதிகார அத்துமீறல் செயல்பாடுகளை அவ்வப்போது மாநாடு வெளிக்கொணர்ந்து வருகிறது. மேலும் பிறப்பு, இறப்பு போலிச் சான்றிதழ்கள் கொடுத்தவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டு வருபவர்களையும் தெள்ளத் தெளிவாக ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடும் மாநாடு. இவர்களின் […] - [SIR வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்](https://maanaadu.in/maanaadumediahouse/): மாநாடு 10 December 2025 SIR படிவம் கொடுத்தவர்கள்,வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். https://electoralsearch.eci.gov.in/ - [திமுக வாக்குறுதி என்னாச்சு? காலி பணியிடங்கள் காணா போச்சா? இதுதான் சமூக நீதி ஆட்சியா மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்](https://maanaadu.in/maanaadu-media-house-2/): மாநாடு 4 December 2025 மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்திட்ட பச்சை துரோகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பார்வையற்றோர் சங்கங்கள் பன்நாட்டு மாற்றுத் திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து நேற்று 03/12/2025 காலை 09:30 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, திருப்பத்தூர் 4 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் அருகிலும், தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகிலுள்ள பனகல் கட்டிடம் முன்பு கொட்டும் மழையில் நனைந்தபடியே நடைபெற்றது. தன் உரிமைக்காக பிறப்பு முதல் போராடி வென்று வாழ்ந்து வரும் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் அனைத்து நிலையிலும் ஆக்கமும் ஊக்கமும் வழங்கி வரும் அனைவருக்கும் என்று தொடங்கி கீழ்க்கண்டவாறு தொடர்ந்தார்கள் அதன் விவரம் பின்வருமாறு : எங்களது அமைப்பானது பல ஆண்டுகளாக தமிழக அரசிடம், அரசு, அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், அரசு தன்னாட்சி நிறுவனங்கள், கழகங்கள் வாரியங்கள், […] - [RTIக்கு தகவல் தராத BDOவிற்கு கடுமையான தண்டனை?](https://maanaadu.in/maanaadu-media-house/): மாநாடு 4 December 2025 ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்ட மாபெரும் உரிமையாக கொண்டுவரப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 . இந்த சட்டத்தின்படி ராணுவ ரகசியங்கள், தொழில்நுட்ப நுணுக்கங்கள், தனிமனிதனின் அந்தரங்கங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பொது ஊழியர்கள், அரசு பணியாளர்களிடம் மற்ற அனைத்தையும் கேட்டு பெற்று தெளிவடைந்து, நிர்வாகங்களில் கோல்மால் நடக்காமல் பார்த்து, தெரிந்து காப்பதற்கே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் வந்த புதிதில் அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறியது என்கிறார்கள் ஆர் டி ஐ ஆர்வலர்கள் ஆனால் சமீப காலமாக.. பல ஆண்டுகளாக ஒட்டி போடுகிற மனுக்களுக்கு ஆகும் செலவும், அதற்காக பயன்படுத்தும் நேரமும் வெட்டி என்பது போல தான் இருக்கிறது ஆர் டி ஐ ஆணையத்தின் நடைமுறை என்கிறார்கள் அதனைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்கள். குற்றம் செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்த சாமானியனாலும் முடியும், தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும், தண்டம் கட்ட வைக்க முடியும் அதன் […] - [தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்போது 4 பேர்! அடுத்தது யார்? புரட்சி பாரதம் கட்சி வலியுறுத்தல்..](https://maanaadu.in/ramkumar-8/): மாநாடு 26 November 2025 தஞ்சாவூர் மாநகராட்சியில் பல கோடி மோசடி என்கிற தலைப்பில் செய்தியை துணிச்சலாக 2023 ஏப்ரல் மாதம் வெளிவந்த அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு, புலனாய்வு இதழில் வெளியிட்டு இருந்தோம். அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரின் முடிச்சூடா மன்னனாக, ராஜராஜ சோழனாக முன்னாள் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை சில அச்சு ஊடகங்களும், சில காட்சி ஊடகங்களும் போற்றியும் , புகழ்ந்தும் தொடர்ந்து செய்தி வெளியிட்டது பலருக்கும் இன்றும் நினைவில் இருக்கலாம். அதனைத் தொடர்ந்து மேலும் பல செய்திகளை மாநாடு செய்தி குழுமத்தில் வெளியிட்டு வந்தோம் அதில் பல முறைகேடுகளை, முறைகேடுகளுக்கு காரணமானவர்களை, சுட்டிக்காட்டி தட்டி கேட்டு கேள்வி எழுப்பியிருந்தோம் அவர்களில் பலர் தற்சமயம் ஒருவர் பின் ஒருவராக லஞ்ச ஒழிப்புத்துறையிலும் சிக்கி வருவது நாள்தோறும் செய்திகளாக வெளிவந்து நாறி கிடக்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார்  பொறுப்பேற்ற காலங்களில் பல்வேறு கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டுவது, மாநகராட்சி சார்பில் […] - [SIRல் எழும் கேள்விகள், பதில்கள் - சிறப்பு வாக்காளர் திருத்தம்...](https://maanaadu.in/maanaadu-news-media-7/): மாநாடு 9 November 2025  SIR தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 76 பிஎல்ஓ-க்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் இப்பணிகளை மாவட்ட வாரியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ், இயக்குநர் கே.கே.திவாரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்ஐஆர் தொடர்பாக பொதுமக்களுக்கு இயல்பாக எழும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு; கேள்வி : நகர்ப்புறவாசிகள் பெரும்பாலும் பணிக்கு செல்பவர்கள் என்பதால் அவர்கள் வீடுகளில் இருக்க வாய்ப்பில்லை. இவர்களிடம் எஸ்ஐஆர் படிவத்தை எப்படி கொண்டு போய் சேர்க்கப் போகிறீர்கள்? பதில் : பிஎல்ஓ-க்களும் அரசு ஊழியர்கள் தான். அவர்களின் அலுவலக பணி முடிந்த […] - [அரசு அதிகாரிகளுக்கு ஆப்படித்த லோக் ஆயுக்தா அலர்ஜியில் அக்கப்போரு அலுவலர்கள்](https://maanaadu.in/maanaadu-news-media-6/): மாநாடு 16 October 2025 தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் 2019 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 135 புகார்கள் பெறப்பட்டதாகவும் அரசு அதிகாரிகள், தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களின் பன் மடங்கு உயர்ந்துள்ள சொத்துக்கள் விசாரணை என்று பல புகார்கள் வந்த நிலையில் அது முதற்கட்டத்தோடு நின்றதாக தெரிகிறது எந்த புகாரும் முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் 2021 இல் இருந்து தற்போது வரை எந்த புகாரும் ஏற்கப்பட்டு முழுமையாக விசாரணை நடை பெற வில்லை என்பதே தமிழ்நாட்டின் லோக் ஆயுக்தா சட்டம் தூங்குகிறதா என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்களுக்கு எழுப்பி உள்ள நிலையில் அரசு அலுவலர்கள் 12 பேரிடம் நடத்திய ரெய்டில் லோக் ஆயுக்தா மீட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கும் பரபரப்பான சூழலும் இதே சம காலத்தில் தான் நடைபெற்று இருக்கிறது. குற்றம் செய்ய அரசு […] - [தமிழர்களுக்கு , தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு தலைகுனிவு சீமான் கண்டனம்](https://maanaadu.in/maanaadu-news-media-5/): மாநாடு 16 October 2025 தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எந்நேரமும் முன்னாள் வந்து தடுக்க காக்க நிற்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளது அதேபோல தற்போதும் மாநில சுயாட்சி பேசி ஆட்சி நடத்துகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கரூரில் 41 பேர் மரண பெரும் துயரை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவில் தமிழர்கள்  அலுவலர்களாக இருக்கக் கூடாது என்று சொல்லி இருப்பதற்கு கடும் கண்டனத்தை எப்போதும் போல இப்போதும் முதல் ஆளாக தெரிவித்திருக்கிறார் சீமான் அதன் விவரம் பின்வருமாறு : கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், […] - [கட்ட அனுமதித்தவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், நிதி இழப்பீடும் உயர் நீதிமன்றம் உத்தரவு ..](https://maanaadu.in/maanaadu-news-9/): மாநாடு 11 October 2025 நீர் நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதனால் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா நெம்மேலி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீர் நிலை என பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்படுகிறது என குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் ஆரம்ப சுகாதார நிலையம் குறிப்பிட்ட அந்த நிலத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது அது சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு […] - [தஞ்சை மாநகராட்சியில் ஆணையர் சரவணகுமார் ...](https://maanaadu.in/maanaadu-news-8/): மாநாடு 07 October 2025 தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் ஆக்கிரமிப்பு நாள்தோறும் பல்கி பெருகி வருகிறது . இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நெறிமுறை படுத்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் வந்து படாத பாடுபட்டு சரி செய்து வைத்த சாலைகள் பலவும் முன்பை விட பல மடங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடைபாதையில் நடக்க முடியாமல் சாலையின் நடுவில் நடக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது அதிலும் மாடுகளும், நாய்களும் எங்கும் நிறைந்து இருப்பதால் விபத்துகளும் நடைபெற்று வருவது வாடிக்கையாக்கிவிட்டது வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி அலுவலர்கள் இனியாவது தடுக்க வேண்டும் இதற்கு முன்னெடுப்பாக சென்னை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம் பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது அதனை கடைப்பிடித்தாவது தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலர்கள் செயல்பட வேண்டும் செய்வார்களா என்பதை பார்ப்போம் சென்னையில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கீழ்க்கண்டவாறு:  சென்னை சாலைகளில் […] - [தஞ்சையில் சட்ட விரோத மது விற்பனை, தட்டி தூக்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள்](https://maanaadu.in/maanaadu-news-media-4/): மாநாடு 02 October 2025 சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 57 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு 2556 மதுபாட்டில்கள் பறிமுதல் இன்று 02.10.2025 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்டங்களிலும் பகுதி நேர அடிப்படையில் காவலர்களை நியமித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி நகர உட்கோட்டத்தில் துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலான காவலர்கள் கொண்ட குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் பலோபந்தாவனம், CRC BUS Dept அருகில் மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர்களான கீழவாசலைச் சேர்ந்த ரமேஷ்(வயது-29) மற்றும் பலோபந்தாவனத்தைச் சேர்ந்த சத்தியராஜ்(வயது-40), கீழவாசலைச் சேர்ந்த ஜெய்சங்கர்(வயது-52),திருவையாரைச் சேர்ந்த குமார்(வயது-48) மற்றும் NK ரோட்டைச் சேர்ந்த காளிசரண் (வயது-44) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 78 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். வல்லம் உட்கோட்டப் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி வல்லம் […] - [காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-116/): மாநாடு 01 October 2025 திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனதுக்குரியது. அதிலும் குற்றத்தை தடுத்து மக்களை காக்க வேண்டிய காவலர்களே அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சமாகும். தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக்குற்றங்களுக்கும், போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தாது, மலிவு விலையில் மது விற்கும் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான் அடிப்படை காரணமாகும். 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நிகழ்ந்தேறுகிறது; இத்தனை சமூகப்பேரவலங்களும் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஆட்சியை, நல்லாட்சி, பொற்கால ஆட்சி, சாதனை ஆட்சி, யாராலும் குறை […] - [வதந்திகளை பரப்ப வேண்டாம் எல்லாத்துக்கும் மேலானது மனித உயிர்கள் முதல்வர் வேண்டுகோள்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-115/): மாநாடு 29 September 2025 கடந்த 27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்து போக முடியாத அளவு நடந்தேறி உள்ள பெருந்துயர் நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பி வருபவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று காணொளி வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:  கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக் கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள், இன்னும் என் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும் துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன். செய்தி கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்த முடிக்கிவிட்டு அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்றிரவே கரூர் சென்றேன். குழந்தைகள், பெண்கள் என […] - [Kpy பாலாவை அரவணைத்து, ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-114/): மாநாடு 25 September 2025 கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதில் கிடைக்கும் பணத்தையும் அவர் உழைப்பால்  கிடைத்த பணத்தின் மூலமும் பல்வேறு மக்களுக்கு பல உதவிகளை பிரதிபலன் பாராமல் செய்து வந்தவர் பாலா அவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலும் அதே போல தங்களுக்கும் உதவும் குணம் இல்லாததாலும் அவரின் புகழை கெடுக்கும் விதத்தில் பலரும் அவதூறுகளை அள்ளி வீசி கடந்த 10 நாட்களாக தங்களின் பிழைப்புகளை நடத்தி வந்த பல பிழையானவர்கள் மத்தியில் உதவும் குணம் கொண்ட பாலாவுக்கு ஆதரவு குரல் எழுப்பி அரவணைத்து கீழ்க்கண்டவாறு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் : பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் […] - [அதிக சொத்து அள்ளிக்குவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓய்வு பெற்ற நிலையில் 2.56 கோடி சொத்துக்கள் முடக்கம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-113/): மாநாடு 25 September 2025 கோடிக்கணக்கில் சொத்துக்களை அள்ளி குவித்த ஐஏஎஸ் அதிகாரி ஓய்வு பெற்று, செத்த பிறகும் அவரின் மற்றும் அவரின் உறவுகளின் சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை அதன் விபரம் பின்வருமாறு: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, மறைந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தியானேஸ்வரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 2.56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி நிரந்தர வைப்பு தொகையை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான தியானேஸ்வரன் 1996ல் ‘டாமின்’ என அழைக்கப்படும் தமிழ்நாடு கனிம வள நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அப்போது அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து குடும்ப உறுப்பினர் மற்றும் தன் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, 1991 – 1996ம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 7.34 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து […] - [திருச்சி அரசு பள்ளியில் 30 லட்சத்தில் கட்டிய வகுப்பறை மேற்கூரை ஏன் பெயர்ந்து விழுந்தது ஊழலா? BJP அண்ணாமலை சரமாரி கேள்வி](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-112/): மாநாடு 22 September 2025 கடந்த 9 மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்ததை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசையும் அமைச்சர் அன்பில் மகேசையும் கீழ்க்கண்டவாறு எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில், ₹30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, பள்ளி திறப்பதற்கு முன்பாக இது நடந்ததால், மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. நமது சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட, இந்தக் கேடுகெட்ட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது வரை மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களுக்குக் கணக்கே இல்லை. […] - [தஞ்சாவூரில் குப்பை கொட்ட முடியாமல், வரிசையாக குப்பை வண்டி என்ன ஆச்சு?](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-111/): மாநாடு 19 September 2026 தற்போது தஞ்சாவூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட முடியாமல் வரிசை கட்டி நிற்கிறது வாகனங்கள் அலட்சியமே காரணமா? விபரம் பின்வருமாறு:  தஞ்சாவூரில் பல இடங்களில் முறையாக குப்பை தொட்டிகள் வைக்காத காரணத்தாலும், அப்படியே வைத்திருந்தாலும் அதை சரியாக முறையாக பராமரித்து குப்பைகளை சரியான நேரத்தில் அப்புறப்படுத்தாத காரணத்தாலும் குப்பைகள் தேங்கி கிடந்து நோய் பரவும் அபாயம் இருப்பதை அனைவரும் அறிவர். இதற்கெல்லாம் மூல காரணம் சில அலுவலர்களின் அலட்சியமே என்று கூறப்படுகிறது. அது எப்படி என்று நாம் கேட்கும் போது நிரந்தர குப்பை அகற்றும் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு வராமல் கையெழுத்து போட்டுவிட்டு வேலை செய்யாமல் சென்று விடலாமாம் அதற்காக அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு மாதமும் அவர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அலுவலர்களுக்கு கொடுக்க வேண்டுமாம் இது எழுதப்படாத சட்டமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறதாம் . இதனால் அவர்கள் செய்ய வேண்டிய […] - [அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் அதிகாரிகளின் பட்டியல் கணக்கெடுப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-110/): மாநாடு 16 September 2025 ஒரே அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரசு அலுவலர்கள் பலர் அரசுக்கு இழப்பையும், பொதுமக்களுக்கு அலுப்பையும் ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை பலரும் பல அலுவலகங்களிலும் பார்த்திருப்போம் அதேபோல . சார் – பதிவாளர் அலுவலகங்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் பட்டியலை அனுப்ப பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 587 சார் – பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு பணிகள் நடக்கின்றன. பணிகள் அதிகமாகும் அளவுக்கு பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் உள்ளது. அழுத்தம் இருப்பினும் பெரும்பாலான அலுவலகங்களில் உதவியாளர்கள் சார் – பதிவாளர்கள் பணியில் அதிக அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வருகின்றன. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து அறிக்கை அளிக்கும் சார் – பதிவாளர்கள் மட்டும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். மேலதிகாரிகள் ஆசியுடன் செயல்படும் சார் – பதிவாளர்கள், உதவியாளர்கள் பலர், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடர்கின்றனர். அவர்கள் மீதான புகார்களும் மூடி மறைக்கப் […] - [தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி ,சம்பளம் கொடுக்க பணம் இல்லை, இலவசங்கள் கொடுக்க இருக்கிறதா ?](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-109/): மாநாடு 16 September 2025 இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா? என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது அதன் விவரம் பின்வருமாறு : அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் நர்ஸ்கள் பணியமர்த்தப்படுகின்றனர். நிரந்தரமாக நியமிக்கப்படும் நர்ஸ்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் குறைவான சம்பளத்தில் இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு முறையான தீர்வை வழங்கக்கோரி நர்ஸ்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சம வேலைக்கு; சம ஊதியம் என்ற அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு நிரந்தர நர்ஸ்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை எனக் கூறி அரசுக்கு எதிராக சென்னை […] - [தமிழ்நாட்டில் முதல் 2 இடத்தை பிடித்துள்ள அரசுத் துறைகள்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-108/): மாநாடு 10 September 2025 ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற வாசகம் சில அதிகாரிகளின் அலுவலக மேஜைகளில் மட்டுமே காணமுடிகிறது. ஆனால் அதே அலுவலகங்களில் உயர்அதிகாரிகள் முதல் இளநிலை உதவியாளர் வரை பதவி வித்தியாசமின்றி லஞ்சம் வாங்கி வருகின்றனர். லஞ்சப்பணத்தில் அதிகாரிகள் சொத்து வாங்கி குவித்தது குறித்து லஞ்சஒழிப்பு போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கி கைதான பட்டியலில் முதல் இடத்தில் வருவாய்த்துறை உள்ளது. சர்வே துறையில் 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் முதல் போர்மேன் வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சிகளில் குடிநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் […] - [போதைக்கு தீ வைத்த 'காவலர்களுக்கு பாராட்டுக்கள்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-107/): மாநாடு 9 September 2025 தஞ்சை சரகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர்(303.478kg), திருவாருர்(208.7kg), நாகப்பட்டினம் (477.8Kg) மற்றும் மயிலாடுதுறை(9.586kg)ஆகிய மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 999.0641kg கஞ்சாவை நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று 09.09.2025 தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.ஜியாவுல்ஹக் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு உட்கோட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள Medi-Care Enviro System என்ற நிறுவனத்தில் போதைப் பொருட்களை தீயிட்டு அழிக்கும் நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் த.கா.ப.,  சீர்காழி குற்றவியல் நீதித்துறை நடுவர் கைலாஷ் , மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் திருவையாறு உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு ஆகியோர்கள் உடனிருந்தனர். போதைக்கு தீ வைத்த காவலர்களின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள். - [தஞ்சையில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட காவலர் தினம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-106/): மாநாடு 7 September 2025 நேற்று 06.09.2025 தஞ்சை மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் த.கா.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பானது கடைப்பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் விருப்பு வெறுப்பின்றி பணிபுரியவும், பணியாற்றும் போது சாவல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றியும் அறிவுரைகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் குறிக்கோளான “கனிவான வார்த்தை, உறுதியான அமலாக்கம்” என்பதனை அனைத்து காவலர்களும் பின்பற்றி செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்கினார்கள். மேலும் காவலர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் தோறும் பொதுமக்கள் காவலர் நல்லுறவு, கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருட்கள் மேற்கொள்ளப்பட்டது. ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. - [தஞ்சையில் புதிய நீதி கட்சி சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-105/): மாநாடு 6 September 2025 நேற்று 5 9 2025 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள்  விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சாவூரில் புதிய நீதி கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் தஞ்சை மாவட்ட தலைவர் சாமி பிரகாஷ் பிள்ளை தலைமையில் தஞ்சை மண்டல செயலாளர் டி.ஆர்.எம்.விஜய் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பல்வேறு கட்சி பொறுப்பாளர்கள், மாநாடு செய்தி குழுமத்தின் ஆசிரியர் ராம்குமார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். - [தஞ்சையில் விபத்து மரணம் நிகழ்ந்த பகுதியில் இன்றும் விபத்து](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-104/): மாநாடு 6 September 2025 தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கரகாரம் பகுதியில் வேகத்தடை இல்லாத காரணத்தாலும் சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கண்டு கொள்ளாமல் மாநகராட்சி அலுவலர்கள் இருப்பதால் நாள்தோறும் விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது அதன்படி இன்று நடந்த விபத்து காட்சியின் வீடியோ கீழே தரப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதன் வீடியோ :  சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ள நிலையில் இன்று மறுபடியும் விபத்து நடைபெற்றிருக்கிறது. நாள்தோறும் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க நாட்கள் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகத்தடை அமைக்க வேண்டும். - [திருச்சியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-103/): மாநாடு 6 September 2025 சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்தசெம்மல் திரு வ. உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்சி கோர்ட் வளாகம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு லால்குடி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தம்போது இந்த நிகழ்வில் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநிலத் தலைவர் விஜே செந்தில் பிள்ளை, மாநிலத் துணைத் தலைவர் கே.பி. டி. பழனிவேல் பிள்ளை மாநிலத் துணைத் தலைவர் மகாலிங்கம், மாணிக்க பிள்ளை , தங்கம் குமார், திருநாவுக்கரசு, டைமன் பாலு பிள்ளை, மற்றும் நிர்வாகிகளும் பொதுமக்களும் பேரழிச்சியாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். - [காசோலை வழக்கு , உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-102/): மாநாடு 04 September 2025 செக் பவுன்ஸ் வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம் அதன் விபரம் பின்வருமாறு :  புதுதில்லி: காசோலை துள்ளல் (Cheque Bounce) வழக்குகள், 1881 ஆம் ஆண்டு நிகரிப்புச் சட்டம் (Negotiable Instruments Act) பிரிவு 138 கீழ், “SICK” என அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள்மீதும் தொடர முடியும் என்று உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் பின்னணி ஒரு நெய்தல் நிறுவனம், தனது பொருட்களை வழங்கிய L.D. Industries Ltd. நிறுவனத்திடம் இருந்து பல காசோலைகளை பெற்றது. ஆனால் அவை அனைத்தும் வங்கி முன் சமர்ப்பிக்கையில் பணம் போதாமையால் துள்ளின. சட்டப்படி நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டும், தொகை செலுத்தப்படவில்லை. இதையடுத்து, நெய்தல் நிறுவனம் NI Act பிரிவு 138 மற்றும் 141 கீழ் குற்றவியல் புகார்கள் செய்தது. மாஜிஸ்திரேட், வழக்கு தொடர்வதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கருதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன்ஸ் அனுப்பினார். ஆனால் எதிர்க்கட்சியினர், “எங்கள் நிறுவனம் […] - [திமுக அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் சீமான் அறிக்கை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-101/): மாநாடு 3 September 2025 தமிழ் மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில் திட்டமிட்டு இழிவுபடுத்தி அவமதித்துள்ளதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான போட்டித் தேர்வில், ஐயா வைகுண்டர் குறித்த கேள்வியில் ‘முடிசூடும் பெருமாள்’ என்பதை ‘The god of hair cutting’ என்று ஆங்கிலத்தில் மிகத்தவறாக மொழிபெயர்த்து இழிவுபடுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசு தொடர்ச்சியாகப் போற்றுதற்குரிய தமிழின முன்னோர்களையும், தமிழ்த் தலைவர்களையும் உண்மைக்குப் புறம்பான அவதூறு பொய்ப்பரப்புரைகள் மூலம் திட்டமிட்டு அவமதித்து வருவது தமிழர் வரலாற்றைத் திரிக்கும் வெளிப்படையான சூழ்ச்சியேயாகும். ‘கோயிலுக்குள் நுழையாதே தீட்டு’ என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக, அந்தக் கோயிலே எனக்குத் தீட்டு என்று முழங்கி, ‘கண்ணாடி முன் நின்று, உன்னை நீயே வழிபடு! நீதான் கடவுள்!’ என்று […] - [தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்களுடனான நல்லுறவில் மற்றுமொரு மைல் கல்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-100/): மாநாடு 2 September 2025 தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்களுடனான நல்லுறவில் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது என்று பத்திரிக்கை செய்தியில்  வெளியிட்டு இருப்பதாவது : இன்று 02.09.2025 தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் கும்பகோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மேற்கு காவல் நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தஞ்சை சரக காவல்துறைத் துணைத்தலைவர் திரு,ஜியாவுல் ஹக் இ.கா.ப அவர்கள், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜாராம் த.கா.ப., அவர்கள் மற்றும் கும்பகோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.அங்கிட் சிங் இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர். காவல் நிலையங்களை நாடி வரும் பொதுமக்கள் அச்சமின்றி காவலர்களுடன் நல்லுறவை பேணும் வகையிலும், காவல் நிலையம் என்றாலே குற்றவாளிகள் வந்து போகும் இடம் என்ற நிலையை […] - [தஞ்சாவூரில் வருகிற 5ந்தேதி வ.உ.சியின் 154வது பிறந்தநாள் விழா..](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-99/): மாநாடு 2 September 2025 தன் நாட்டைக் காக்க, தாய் நாட்டை மீட்க தனி யுக்தியை செயற்படுத்தி ஆங்கிலேயரை அலற வைத்தவர், கப்பலோட்டிய தமிழர்! மாடுகள் கூட இழுக்க மறுக்கும் கடும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 ஆவது பிறந்தநாள் விழாவை மிக எழுச்சியாக வருகிற 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் புதிய நீதிக் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் திருச்சி புதுக்கோட்டை பிரிவு சாலை ரவுண்டானா பகுதியில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வில்  ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சுதந்திர வேங்கையை நெஞ்சில் அழுத்தி நிறுத்தி நினைவு கூறுவதற்காக ஒன்று கூடுகின்றனர் அனைவரையும் அழைக்கின்றனர். - [தஞ்சையில் விபத்து அகால மரணம் , வேகத்தடை அமைக்கப்படுமா?](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-98/): மாநாடு 2 September 2025 ஒவ்வொரு உயிரும் உன்னதமானது உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உயிருள்ளவரை துயரானது மரணம் . அதிலும் விபத்து மரணம் என்றால் பெருந்துயரம் . ஒரு ஊழியர் கவனமாக கடமையை செய்யாமல் அலட்சியமாக இருப்பதனால் ஏற்படும் மரணத்திற்கு பாரதிய நியாய சன்கீதா பிரிவு 106ல் தண்டனை கொடுக்க முடியும் என்கிறது.  பல பகுதிகளிலும் பயணிக்கும் போது நாம் சாலையில் பெரிய பள்ளங்கள் இருப்பதையும், வேகத்தடை இருக்க வேண்டிய இடத்தில் வேகத்தடை இல்லாமல் விபத்து ஏற்படக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதையும் கண்டிருப்போம் அதன் விளைவுகள் விபரீதமாக இருப்பதை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அதிகமாக உணர்ந்து இருப்பார்கள் இதேபோல ஒரு நிலை தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கரகாரம் கடைத்தெருவில் கடை நடத்தி வந்த முருகேசன் என்பவரின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 18-8-2025 அன்று மதியும் 2 மணியளவில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவரின் கடையின் அருகிலேயே சாலையில்  இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதியதில் […] - [17 கோடி ஊழல் மாநகராட்சி முன்னாள் ஆணையர் உட்பட 5 பேர் மீது வழக்கு பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-97/): மாநாடு 27 August 2025 ஊழல் செய்து சொத்து சேர்த்து விட்டோம் நம்மை யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அரசு பணியில் உள்ள பல அலுவலர்களுக்கும், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டோம் இனி நம்மை யாரும் சீண்ட கூட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த, இருக்கின்ற ஊழல் முறை கேட்டில் அரசு பணத்தை ஆட்டைய போட்ட அரசு அலுவலர்களை ஊழல் ஊழ்வினை போல துரத்தும், லஞ்ச ஒழிப்புத்துறை வேலையில் இருந்து சென்றவர்கள் மீது வழக்கு போட்டு பிடிக்கும் வேலையை செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வாரத்திலேயே சிவகங்கை மாவட்டம் சங்கரா புரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்த பதட்டம் குறைவதற்குள் அடுத்து இந்த மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை பணி ஓய்வு பெற்ற அலுவலர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2015 முதல் 2018 வரை […] - [விஜயகாந்த்க்கு சீமான் புகழ் வணக்கம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-96/): மாநாடு 25 August 2025 இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்கண்டவாறு புகழ் வணக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர்! இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்! தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை! ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக்கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னைநாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி! எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் சரிசமமாக பழகிய பண்பாளர்! தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஐயா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவரது நற்செயல்பாடுகளைப் […] - [பணி ஓய்வு பெற்றவர் உட்பட 5பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-95/): மாநாடு 25 August 2025 பத்துக்கு பத்து அறையில் நாயை பூட்டி பத்து நாட்கள் சோறு போடாமல் பட்டினியில் போட்டு வைத்து கதவைத் திறந்து விட்டால் கண்ட இடத்தில் வாய் வைத்து கண்டதை தின்று கொழுப்பது போல பல அரசு ஊழியர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து கண்ட இடத்தில் கண்ட விதத்தில் கைவைத்து ஊழல் முறைகேடு செய்து கொழுத்து வருவதையும், யார் யாருக்கு எப்ப எந்தவிதத்தில் கவனிக்க வேண்டுமோ அந்த விதத்தில் கவனித்து பதவி உயர்வு பெற்று பகட்டாக வாழ்வதையும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு ஜனநாயக கடமையை உணர்ந்து கடமையாற்றும் சமூக ஆர்வலர்களும் , சம்பந்தப்பட்ட ஊழல் பேர்வழிகளும் நன்கறிவர் அதேபோல நாடறிய வழக்கில் மாட்டிக் கொண்டு லோள்பட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து செய்தித்தாள்களில் செய்தியாகி கைப்பேசியில் கவன செய்தியாகி மானம் போகும் போது வெட்கி தலைகுனிந்து தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தினரையும் தலைகுனிய வைப்பவர்களும் இது மாதிரியான பேர்வழிகளை காப்பாற்றி அவர்களின் […] - [தூய்மை பணியாளர் மரணம் அலட்சியம் காட்டிய அலுவலர்களுக்கு தண்டனை கிடைக்குமா](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-94/): மாநாடு 23 August 2025 இன்று அரசு அலுவலர்களின் அலட்சியத்தாலும், அப்பாவி தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உயிர் பறிபோகி இருக்கிறது, குழந்தைகள் தாயை இழந்து பரிதவித்து நிற்கிறார்கள், மயிர் சரியாக வெட்டவில்லை என்றாலே சேவை குறைபாடு மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்றுத் தர முடியும் என்கிறது சட்டம் அப்படி இருக்க சென்னை சோளிங்கநல்லூர் பகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் இன்று பணிக்கு செல்லும்போது வழியில் தேங்கி நின்ற மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அவரின் மரணத்திற்கு தமிழக அரசு இழப்பீடாக 20 லட்ச ரூபாய் அறிவித்திருக்கிறது. மயிருக்கே கோர்ட்டுக்கு போகலாம் , நீதி பெறலாம் , தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் என்கிற நிலை இருக்கும் போது கேட்பாரற்ற நிலையில் ஒப்பந்த ஊழியராக தூய்மை பணியாளர் பணியை செய்து கொண்டிருந்த அப்பாவி தொழிலாளி மரணத்திற்கு காரணமான அலட்சியமாக இருந்த அலுவலர்களுக்கு சட்டப்படி […] - [கருணை அடிப்படையில் அரசு பணி விதிமுறை திருத்தம் அரசாணை வெளியிடு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-93/): மாநாடு 22 August 2025 கருணை அடிப்படையில் பணி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இனி மாநிலம் முழுவதும் ஒற்றை முன்னுரிமைப் பட்டியலாகப் பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் கடந்த 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கருணை அடிப்படையில் இனி 3 ஆண்டுகளுக்குள் பணி நியமனம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியின்போது உயிரிழந்தாலோ, உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் இருக்கும் போது ஓய்வு பெற்றாலோ அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்படுகிறது.இது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் தொடர்பாகவும் மாநில அளவில் ஒரே பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய […] - [அண்ணாமலை மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-92/): மாநாடு 21 August 2025 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவு: வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கீழ் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை, இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைத்துக் கொண்ட உங்களின் வெட்கமில்லாத அரசை விட, கருப்பான அல்லது அவமானகரமானது வேறு எதுவும் இல்லை. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, உங்களின் வெட்கமில்லாத அரசு, செந்தில் பாலாஜியை மீண்டும் அவர் முன்னர் வகித்த அதே அமைச்சர் பொறுப்பை வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து தான் அந்த அமைச்சர் பதவி பறிக்கப்ப்டதுதொடர்ந்து வரும் […] - [பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி காலி மசோதாவிற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-91/): மாநாடு 21 August 2025 பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31 வது நாள் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமலிகளுக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்த, 130-வது அரசியல் சட்டத்திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள் கைது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவி நீக்கம் செய்யலாம். பாஜக வைத்ததுதான் சட்டம். வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கும் எல்லா கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும். மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாகக்கண்டிக்கிறேன். இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் […] - [லஞ்சம் தாசில்தார், சர்வேயர் கைது](https://maanaadu.in/maanaadu-news-media-3/): மாநாடு 21 August 2025 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார், சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன் விபரம் பின் வருமாறு:  ஹைதராபாத்: ரங்காரெட்டி மாவட்டம், ஆமங்கல் மண்டலத்தில் நிலப் பதிவு மற்றும் ஆவண திருத்தப் பணிகளை முன்னெடுப்பதாகக் கூறி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், தாசில்தார் சிந்தகிண்டி லலிதா மற்றும் மண்டல சர்வேயர் கோட்டா ரவி ஆகியோர் தெலங்கானா ஊழல் தடுப்பு பிரிவு (ACB) வலையில் சிக்கினர். லஞ்சம் கோரிய முறைகள் புகாராளரின் பாட்டியாரின் நிலப் பதிவை முடிக்கவும், அதிலிருந்த தட்டச்சு பிழைகளைச் திருத்தவும், அதிகாரிகள் தலா ரூ.50,000 கோரியதாக தெரியவந்தது. விசாரணையில், தாசில்தார் லலிதா ஏற்கனவே ரூ.50,000 பெற்றுக்கொண்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. வலைவீசி கைது புகாராளரின் தகவலின் பேரில், ACB-இன் City Range-2 பிரிவு அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து, லஞ்சத் தொகையைப் பெறும் தருணத்தில் இருவரையும் சிக்கவைத்து கைது செய்தனர். நீதிமன்றக் காவல் கைது செய்யப்பட்ட லலிதா […] - [மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-90/): மாநாடு 18 August 2025 நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் சாராயக்கடையை தனியார் நடத்தி வந்த நிலையில் அப்படியெல்லாம் மதுபான கடையை தனியார் நடத்த இனியும் அனுமதி கிடையாது அதனை நடத்த சரியான தகுதி வாய்ந்தவர்கள் நாங்கள் தான் என்பது போல காட்டிக் கொண்டு தனியார் நடத்திய மதுபான கடைகளை தமிழக அரசு தானே எடுத்து நடத்தி சாராயக்கடை, மதுபான கடை என்று இருந்த பெயரை எல்லாம் மாற்றி டாஸ்மாக் கடை என்று பெயர் வைத்துக் கொண்டு, பலர் இதனை இழுத்து மூட வேண்டும் என்று போராடிய போதும், சசி பெருமாள் போராடி உயிர்விட்ட போதும் கூட அதெல்லாம் முடியாது கொஞ்சம் கொஞ்சமாக தான் குறைப்போம் என்று சொல்லிக்கொண்டு மக்கள் தொகையை குறைக்கவும் மக்களிடம் கொஞ்சம்.. நஞ்சம் உள்ள ஒழுக்கத்தை கெடுக்கவும் காரணமான டாஸ்மாக்கை அரசு நடத்தி வரும் நிலையில், இவர்கள் அவர்கள் என்று பாராமல் அனைவருக்கும் நோய் பரவலை தடுத்து, […] - [நாய் கடியால், நரக வேதனையில் இளைஞர் உயிர் பிரிந்த சோகம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-89/): மாநாடு 04 August 2025 அலட்சியம் வாழ வேண்டிய இளைஞரின் உயிரை பறித்திருப்பது திருப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆபரணத்தின் வைரமாக இருந்தாலும் வயிற்றுக்குள் சென்று விட்டால் குடலை கிழித்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்துள்ளது இந்த துயர, சோக சம்பவம் இனியேனும் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது , உயிர் உன்னதமானது என்பதை உணர வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது திருப்பூர் சம்பவம் விவரம் கீழ்க்கண்டவாறு: வளர்ப்பு நாய் கடித்தும் தடுப்பூசி போடாமல் இருந்த வாலிபர், ரேபிஸ் தாக்கி பலியானார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி, மடத்துப்பாளையம் ரோட்டில் வசித்து வருபவர் வெங்கடேஷ். வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர். இவரது மகன் சஞ்சய், 21. மூன்று மாதம் முன், இவரது வீட்டில் வளர்த்து வந்த லேப்ரடார் இனத்தை சேர்ந்த நாயிடம் சஞ்சய் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அதில், அவரது கையில் சிறியளவில் நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. அதனை பெரிதாக எடுத்துக் […] - [தமிழ்நாட்டுக்கே ஆபத்து சீமான் எச்சரிக்கை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-88/): மாநாடு 2 August 2025 ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இந்தியத் தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர கதியில் இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், இலட்சக்கணக்கான வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதும் மக்களை முட்டாளாக்கி, மக்களாட்சி முறைமையைக் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும். பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு வாக்களிப்பவர்களை மட்டும் பட்டியலில் சேர்ப்பதோடு, பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களை இனங்கண்டு நீக்கும் வகையில் செயல்படுத்தும் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தமானது’ தேர்தல் நடைமுறையையே வெற்று சடங்காக மாற்றும் எதேச்சதிகாரப்போக்காகும். அண்மையில் பீகார் மாநிலத்தில் நடந்து வந்த ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி’ நிறைவு பெற்ற நிலையில், அம்மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள 36 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே […] - [மாநகராட்சியில் ஊழல் கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளு பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-87/): மாநாடு 29 July 2025 தேர்தல் காலம் நெருங்கும் வேலையில் தமிழகத் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் பணியை செய்ய இப்போதுதான் உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டு வந்தது போல பல இடங்களிலும் மக்கள் பணியாற்ற கிளம்பி இருக்கிறார்கள் அதே போல பல ஊழல்களையும் பட்டியலிடத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது நாள்தோறும் நாம் காணும் காட்சியாக இருக்கும் வேலையில் இன்று மதுரை மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்று இருக்கிறது அதன் விவரம் பின்வருமாறு : மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிட குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனைப் பற்றி அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் […] - [கடன் பெற்று கம்பி நீட்ட நினைத்தவர் கம்பி எண்ண வேண்டும் நீதிமன்ற உத்தரவு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-86/): மாநாடு 29 July 2025 செக் கொடுத்து மோசடி செய்த நபருக்கு சிறை தண்டனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் அருகே உள்ள மஞ்சுநகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் . இவர் ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராமானுஜம் இந்து நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் ஒட்டநத்தத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சுதா இருவரும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுதாவிடம் ராதாகிருஷ்ணன் 10 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தான் வாங்கிய கடனுக்கு ராதாகிருஷ்ணன் 4.2.2023 தேதியிட்ட தலா ரூ.5 லட்சத்துக்கான 2 காசோலைகளை சுதா தம்பதியரிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை சுதா வங்கியில் செலுத்தியபோது 9.2.2023-ல் பணம் இல்லை என திரும்ப வந்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் சுதா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் […] - [கும்பகோணம் பள்ளி 94 குழந்தைகள் மரணம் சோகம் இனி தொடர கூடாது.](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-85/): மாநாடு 16 July 2025 அலுவலர்களின் அலட்சியத்தால் ஆண்டு 21 கடந்தும் அழுகுரலும், தாய்மார்களின் கண்ணீரும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நாள் 16ந்தேதி ஜூலை மாதம் இந்நாள். இதே நாளில் தான் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் துடிதுடித்து இறந்த செய்தி திக்கெடடும் பரவியது . இதயம் உள்ள நல்ல உள்ளங்கள் துடிதுடித்தது அதற்கு காரணம் ஊழியர்களின் அலட்சியமே என தெரியவந்தது.  இது போன்ற பள்ளிகளை… முதலில் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக உள்ள அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர், தலைமை கல்வி அலுவலர், தனியார் பள்ளிகளுக்கு என்று உள்ள அலுவலர்கள் என பல்வேறு அலுவலர்கள் கண்காணிக்க திறம்பட பள்ளிகளை நடத்த, மக்களின் வரி பணத்தில் இருந்து ஊதியம் கொடுத்து அரசு அலுவலர்களை வைத்திருக்கும் போதும் சில அலுவலர்கள் தனது கடமை என்னவென்று தெரியாமல் அல்லது கடமையை செய்ய தவறி அலுப்புப்பட்டு கூட வேலையை செய்யாமல் இருப்பதால் […] - [தரமற்ற சாலை அமைத்து பல கோடி மோசடி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-84/): மாநாடு 11 July 2025 தமிழ்நாட்டில் சாலைகள் தரமற்றதாக அமைக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக பல சாலைகள் முதல் நாள் போடப்பட்ட சாலையை மறுநாள் காலை எழுந்து பார்த்தால் காக்கா கக்கா போனது போல் போடப்பட்டுருப்பதை காண முடியும் இவ்வாறான தரமற்ற சாலைக்கு தரமற்ற அலுவலர்களின், தரம் அற்ற போக்கே காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் தங்களுக்கு பல வழிகளிலும் பணம் வர வேண்டும் என்பதற்காக தரமற்ற வேலைகளை செய்து சாலைகளை அமைத்து கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் பெற்று சுகபோகமாக வாழ்வதற்காக, வரிகட்டும் மக்களின் பணத்தை வீணடிக்கிறார்கள் பல அலுவலர்கள் என்பதை சுட்டிக்காட்டி குட்டு வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விபரம் பின்வருமாறு: திருநெல்வேலி மாவட்டம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சி.எம்.ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனது ஊரில் அமைக்கப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்து வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் மதவக்குறிச்சி முதல் உகந்தான்பட்டி இடையே சாலை […] - [தெரு நாய் கடித்ததை அலட்சியப்படுத்திய இளைஞர் பரிதாப மரணம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-83/): மாநாடு 10 July 2025 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எட்வின் பிரியன் எம்.பி.ஏ பட்டதாரியான இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது. நாய் கடியை அலட்சியமாக எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று ஊசி போடாமல் சிகிச்சை எடுக்காமல் எட்வின் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் எட்வினுக்கு வாயில் எச்சில் துப்பியபடியும், சத்தம் போட்டுக்கொண்டு இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த எட்வின் உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உடல் மாற்றம் அடையாமல் இருந்துள்ளது. இதனால் உறவினர்கள் அவரை தளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு எட்வின் பிரியன் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதன்பிறகு எட்வின் பிரியனை தளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […] - [மாநகராட்சியில் பல கோடி மோசடி, திமுகவுக்கு நெருக்கடி, மண்டல தலைவர்கள் ராஜினாமா](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-82/): மாநாடு 9 July 2025 மாநகராட்சியில் மக்களின் பணம் வீணடிக்கப்படுவது தெரிந்திருந்தும் பலரும் வேலைப்பளுவின் காரணமாக இது நமது வேலை இல்லை என்று ஒதுங்கி செல்கின்றனர் வரி வசூல் செய்பவர்கள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் மாநகராட்சி பணத்தில் மஞ்ச குளித்திருப்பது மதுரை மாநகராட்சியில் நடைபெற்று இருக்கும் பல கோடி மோசடி மூலம் மக்களுக்கு தெரிகிறது. இதனை தடுக்கும் போக்கில் சமூக ஆர்வலர்கள் யாராவது தகவல் கேட்டால் கூட ஊழல் பேர்வழிகள் ஒன்று சேர்ந்து கொண்டு தகவலை தராமல் ததிங்கினத்தோம் தாளம் போட்டு போக்கு காட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் தஞ்சாவூர் மாநகராட்சியிலும் இதே நிலைதான் தொடர்கிறது அதனைப் பற்றி விரைவில் முழுமையாக பார்ப்போம். தற்போது பல கோடி மோசடி நடந்துள்ள மதுரை மாநகராட்சி விபரம் பின்வருமாறு : மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அனைத்து மண்டல […] - [பேச்சு, கருத்துரிமைக்கு தடை போட முடியாது நீதிமன்றம் அதிரடி உத்தரவு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-81/): மாநாடு 27 June 2025 பேச்சுரிமை, கருத்தரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை இதற்கு தடைப்போட முடியாது, உயர்நீதிமன்ற நீதிபதியான என் மீது எவ்வளவு விமர்சனத்தை, கருத்துக்களை வைக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சென்று பாருங்கள் யாரும் நம்மை விமர்சிக்க கூடாது என்று தடை போட முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார் விவரம் பின்வருமாறு : திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனகளுக்கு தடை செய்வது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதற்குச் சமம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில்  திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் 3 நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தைத் தடை செய்ய வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களால் படம் தோல்வியடைந்து நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி […] - [மாநகராட்சியில் பல கோடி மோசடி 5 பில் கலெக்டர்கள் கைது](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-80/): மாநாடு 27 June 2025 சில மாநகராட்சி பில் கலெக்டர்கள் தாங்கள் தான் மாவட்ட கலெக்டர்கள் என்பது போல நினைத்துக் கொண்டு மக்களிடம் உங்களது கட்டடங்களுக்கு எவ்வளவு வரி போட வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்று அதை இதை சொல்லி நாங்கள் வரியை குறைத்து போட வேண்டும் என்றால் எங்களுக்கு இவ்வளவு தர வேண்டும் என்று பெற்றுக்கொண்டு வரியை குறைத்து போடுவதை வரிகட்டும் அனைவரும் அறிந்த ஒன்றே அவர்களில் சிலரின் சொத்துக்கள் பட்டியலை ஆய்வு செய்தாலே எவ்வளவு நேர்மையாக பணிகளை செய்து சம்பாதித்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் கட்டடங்களுக்கு வரியை குறைத்துப் போட்டு கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி வரி மோசடி செய்ததாக பில் கலெக்டர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், உசேன், ராஜேஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மதுரை கிழக்கு , வடக்கு ,மத்திய ,தெற்கு ,மேற்கு மண்டலங்களில் முறைகேடு குறித்து விசாரிக்க […] - [தஞ்சாவூர் மாநகராட்சி செய்யுமா? அதிகாரிகளின் மெத்தனமே காரணம் உயர் நீதிமன்றம் காட்டம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-79/): மாநாடு 25 June 2025 தன் தேவையே போதும் என்று நினைத்து மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை நாம் என்கிற மிதப்பில் இருக்கும் சில செயலற்ற அரசு அலுவலர்களால் சாமானியர்கள் பொதுமக்கள்  நடந்து செல்ல சாலைகள் கூட ஒழுங்கற்ற முறையில் இருப்பதற்கு ஒழுக்கமற்ற அந்த அலுவலர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்பதற்கு பல்வேறு காட்சிகளை சாட்சிகளாக கண்முன் நிற்கின்றது செய்திகளிலும் வருகின்றது ஆனாலும் ஊராருக்கு தானே இதெல்லாம் என்று உதிர்த்துவிட்டு அலையும் சில பொறுப்பற்ற அலுவலர்களுக்கு காட்டமாக எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருப்பதாவது :  திருச்சி மாவட்டம் புங்கனுார் டேனியல் சிமியோன் சுதன் தாக்கல் செய்த மனுவில் புங்கனுாரில் கட்டட திட்ட வரைபட அனுமதியின்றி ஒரு அரிசி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றக்கோரி கலெக்டர், ஸ்ரீரங்கம் தாசில்தாருக்கு புகார் அனுப்பினேன். அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த […] - [5 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் தாமதம் ஏன் சீமான் அறிக்கை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-78/): மாநாடு 24 June 2025 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயா ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடுநிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்பும் வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏமாற்றமும், மனவேதனையும் அளிக்கிறது. விசாரணையை விரைந்து முடிக்காமல் இந்திய ஒன்றிய அரசின் குற்றப்புலனாய்வுத்துறை தொடர்ந்து காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 22.06.2020 ஆம் நாள்  அப்படுகொலைகள் தமிழ்நாடு காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் சி.பி.சி.ஐ.டி முதலில் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், பின்பு இந்திய ஒன்றிய அரசின் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இப்படுகொலைகள் தொடர்பாக அன்றைய சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 105 சாட்சிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று […] - [முதல்வரால் கைத்தட்டி திறக்கப்பட்டது ! மக்களால் கை கொட்டி சிரிக்கப்படுகிறது காரணம் யார் ?..](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-77/): மாநாடு 20 June 2025 சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியை உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் விமர்சிக்கும் போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்களின் ஆட்சியின் திறனை பற்றி கூறும்போது பல இடங்களில் நான்காண்டு ஆட்சி இதுவெல்லாம் சாட்சி என்று அடுக்கு மொழியில் தன் தந்தையைப் போலவே பேசி வருவதை பலரும் பல நிகழ்ச்சிகளில் பார்த்து வருகிறோம் ஆனால் உண்மை நிலை அப்படியா என்று ஆழ்மனதை அழுத்தி கேள்வி எழுப்பினால் கிடைக்கும் விடை: making , acting, shooting என்கிற போக்கில் ஆட்சி நடப்பதை மக்கள் noting செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் அதற்கு உதாரணமாக 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலையில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் மழையில் கரைந்து போனதையும், தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசலில் கட்டப்பட்ட பாலம் 10 நாளில் இடிந்து உள்வாங்கியதையும்.. இதுபோல ஊருக்கு ஒன்றல்ல, பேருக்கு […] - [மாநில தகவல் ஆணையர்களாக வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி , எம்.நடேசன் ஆகியோர் நியமனம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-76/): மாநாடு 19 June 2025 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தில் 1 தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். தகவல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலம் கடந்த 2022 நவம்பர் மாதம் முடிவடைந்தது. புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தரும், தகவல் ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன் வழக்கறிஞர் ஆர்.பிரியகுமார், ஓய்வுபெற்ற ஐசிஎல்எஸ் அதிகாரி கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2 தகவல் ஆணையர்கள் பதவியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்வு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து தகவல் ஆணையர்களாக வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோரை நியமித்து […] - [அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, அலுவலர்கள் அரசு உத்தரவை மதிப்பார்களா?](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-75/): மாநாடு 18 June 2025 பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25000 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது விபரம் பின்வருமாறு : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையின் படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினார். நாளை பொது நல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது […] - [முதல்வர் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி, தூர் வாராத பகுதிகளையும் நேரில் பார்வையிடுங்கள் கோரிக்கை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-74/): மாநாடு 15 June 2025 டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூரில் தண்ணீர் திறப்பிற்கு தஞ்சாவூர் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும், நிபந்தனை இன்றி கடன் வழங்க வேண்டும் தூர்வாராத பகுதிகளை முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதற்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பும் – மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகள் கடன் வாங்குவதற்கு சிபில் ஸ்கோர் பார்ப்பதை கைவிட்டு, நிபந்தனை இன்றி அனைத்து விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம், இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே அந்த நடைமுறை ரத்து செய்து அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு […] - [தாசில்தார் கைது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-73/): மாநாடு 14 June 2025 வட்டாட்சியர் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கி மாட்டி கெட்ட பெயரோடு நாள்தோறும் வலம் வருவதை செய்திகளின் வாயிலாக அறிந்து வரும் வேளையில் அற்ப லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில் புதிதாக இவரும் இணைந்துள்ளார் விபரம் பின்வருமாறு: மயிலாடுதுறை மாவட்டம் கோவில்பத்து தாடாளன் கோவில் பகுதியை சேர்ந்த அலெக்ஸாண்டர் தன் தாய் பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக சீர்காழி தாலுகா அலுவலகத்தில் உள்ள மண்டல துணை தாசில்தார் தேவகியை சந்தித்து மனு அளித்துள்ளார். தேவகி 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அலெக்சாண்டர் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையினரின் அறிவுறுத்தலின்படி பணத்தை அலெக்சாண்டர் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்த தேவகியிடம் கொடுத்துள்ளார். லஞ்சப் பணத்தை அலுவலகத்தில் இருந்த தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் டெல்பி வாங்கியுள்ளார். அப்போது […] - [ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் இவ்வளவு தான் தர முடியும் மாநகராட்சி திட்ட வட்டம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-72/): மாநாடு 14 June 2025 கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளமாக, ஒப்பந்ததாரர் மூலமாக, 20 ஆயிரத்து, 454 ரூபாய் மட்டுமே வழங்க இயலும்; அதற்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை’ என, மாநகராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் கலெக்டர் நிர்ணயித்துள்ள கூலி ரூ.770 வழங்க வேண்டிய அவசியமில்லை என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருக்கிறார். கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.770 வழங்கக் கோரி, கலெக்டர் அலுவலகம் முன் நான்காம் நாளாக நேற்றும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். 350க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். இச்சூழலில், பேச்சுவார்த்தையில் கூறியது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி தொகை நிகர மாத சம்பளம் ரூ.16 ஆயிரம். சென்றாண்டை விட கூடுதலாக ரூ.1,250 பணியாளர்களின் வங்கி கணக்கில் ஒப்பந்ததாரரால் […] - [மாநகராட்சி பில் கலெக்டர் லஞ்சம், கைது பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-71/): மாநாடு 13 June 2025  மாநகராட்சியில் பணியாற்றும் சில பில் கலெக்டர்களின் சம்பளத்தையும் அவர்கள் வாங்கி குவித்திருக்கும் சொத்தின் விவரங்களையும் அறிந்து கொண்டாலே போதும் அவர்கள் கொஞ்சமும் அச்சப்படாமல் லஞ்சத்தில் மஞ்ச குளித்து இருப்பது தன்னாலே வெளிப்படும். அரசு பணியாளர்களுக்கு என்று விதிகள் இருக்கிறது அதன்படி பார்க்கிறபோது அரசு பணியாளர்கள் நன்னடத்தை விதிகள் 1973 என்று ஒன்று இருப்பதே சமூக அக்கறை உள்ள பலருக்கும் தெரிவதில்லை அதனால்தான் லஞ்சப் பெருச்சாளிகள் பெருகி கிடக்கிறார்கள் சமூகத்தில். ஒரு அரசு பணியாளர் சொத்துக்களை வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இருக்கிறது தனது மேலதிகாரிக்கு தெரிவித்திருக்க வேண்டும் எந்த சொத்துக்கள் எவ்வளவு வாங்கி இருக்கிறோம் என்று பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும் அதனை பொதுமக்கள் தகவலாக கேட்கும் போது தர வேண்டும் ஆனால் சமூக ஆர்வலர்கள் கூட இதனை முழுவதுமாக பயன்படுத்தாமல் இருக்கும் காரணமே அவர்களின் பலமாக இருக்கிறது லஞ்சம் பெருகியதால் கொஞ்சமும் வாழ […] - [RTI சட்டத்தை மீறினால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம்...](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-70/): மாநாடு 12 June 2025 லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க பல வழிகளை தேடிப்பார்த்து தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் பங்கேற்று தனது அடிப்படைக் கடமையாக ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக வந்த மாபெரும் சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இந்தச் சட்டத்தின் நோக்கம் அரசாங்க பணியாளர்கள் பண்ணையார்கள் போல நடந்து கொண்டு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அரும்பெரும் மதிப்பிற்குரிய மக்களை அலைக்கழிப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும், ஒவ்வொரு தனி ஒருவனும் தடைகளை நொறுக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை அதன் வலிமையை சிதைக்கும் வேளையில் அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டு பணியாற்றும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை பல தகவல்களை சமூக ஆர்வலர்கள் கேட்கும்போது அரசு அலுவலகங்களில் இருந்து பொது தகவல் அலுவலர்கள் கொடுக்கும் பதில் என்ன என்று தெரியுமா? […] - [தஞ்சாவூரில் உலக புகழ்பெற்ற கருட சேவை, முதல்வருக்கு அழைப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-69/): மாநாடு 12 June 2025 உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூரில் 91 ஆம் ஆண்டு நடைபெற உள்ள கருட சேவைக்கான அழைப்பிதழை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள முருகானந்தம் சுற்றுலா துறை அலுவலர் சங்கர்,மேயர் சண். ராமநாதன், தியாகராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டவர்களிடம் அழைப்பிதழ் வழங்கி வரவேற்றார் ஆடிட்டர் ரவிச்சந்திரன் மேலும் விழா நாளான அன்று பொது விடுமுறை 16/6/2025 விடக் கோரியும் ஒரே இடத்தில் கருட சேவை அமைப்பதற்கான அனுமதி வேண்டி கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் வருகின்ற 15, 16 தேதி இரண்டு நாட்களும்  தஞ்சையில் பயணம் அமைந்துள்ளதால் முதல்வரையும் அவர்களின் குடும்பத்தினரையும் இந்த விழாவிற்கு அழைத்துள்ளோம் என்றார் ஆடிட்டர் ரவிச்சந்திரன். மேலும் அனைத்து முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் கருட சேவை பத்திரிகை தந்து அழைக்கும் பணியில் ஆடிட்டர் ரவிச்சந்திரன் அழகிய தஞ்சை திட்ட இயக்குனருடன், அழகிய தஞ்சை பொருளாளர் சங்கரும் உடன் […] - [தஞ்சை மாவட்டத்தில் கடத்தலை விரட்டிச் பிடித்த போலீஸ்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-68/): மாநாடு 10 June 2025 இன்று மதியம் 1:30 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நகரப் பகுதியில் TN 14 – 7662 பதிவெண் கொண்ட மகேந்திரா XUV நான்கு சக்கர வாகனத்தில் குட்கா போதை பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை நகர உதவி ஆய்வாளர், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆகியோர் மேற்கண்ட வாகனத்தை அடையாளம் கண்டு அதை நிறுத்த முற்படும்போது மேற்கண்ட மகிழுந்தை ஓட்டி வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் என்ற நபர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். அதை ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த காவல்துறையினர் அந்த மகிழுந்தை சோதனை செய்தபோது சுமார் 100 கிலோ அளவிலான குட்கா போதை பொருள் காரின் டிக்கியில் வைக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்தது […] - [திமுக, அதிமுக Ex MLA தவெகவில் விஜய் அறிக்கை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-67/): மாநாடு 09 June 2025 தமிழக வெற்றிக்கழகத்தில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர்களுக்கு கட்சியினர் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை தொண்டர்கள் வரவேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் திரு. டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS. அவர்கள், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:- 1. […] - [இன்று காயிதே மில்லத் பிறந்தநாள், யார் இந்த காயிதே மில்லத் தெரிந்து கொள்வோம்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-66/): மாநாடு 05 June 2025 அறநெறியோடு சரியாக வாழ்ந்த சகாப்தம் பெருந்தமிழர் ஐயா காயிதே மில்லத் அவர்களின் 130 வது பிறந்த நாளான இன்று அவரின் நினைவை கூர்ந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மாநாடு செய்தி குழுமம் மகிழ்கிறது. வாழும்போதே இறப்பவர்கள் மத்தியில் இறந்த பிறகும் தன் நற்செயல்களால் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஐயா காயிதே மில்லத் ஏன் தெரியுமா.. அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன் ,ஆதலால் மதத்தை விடத் தமிழ் எனக்கு முக்கியம்’ என்று முழங்கிய மாமனிதர் மகத்தான தலைவர் ஐயா காயிதே மில்லத். காயிதே மில்லத் தமிழகம் கண்டெடுத்த முத்து. இஸ்லாமியர்களின் சொத்து’ என்று தலைவர்களால் போற்றப்பட்டவர். ‘இஸ்லாம் எங்கள் வழிபாடு, இந்தியாதான் எங்கள் தாய்நாடு’ என்று பாகிஸ்தான் பிரிவினையின்போது உரக்கக்கூறி நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய முகமது இஸ்மாயில் என்ற இயற்பெயரைக் கொண்ட காயிதே மில்லத், சுதந்திரத்துக்காகப் போராடிய முக்கியத் தலைவர்களில் ஒருவர். திருநெல்வேலி அருகே பேட்டை […] - [தஞ்சையில் தரங்கெட்ட சாலையில் விபத்து](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-65/): மாநாடு 03 June 2025 தஞ்சாவூரில் சாலைகள் பாலைவனங்கள் போலவும்,  பள்ளத்தாக்குகள் போலவும் , மழை நேரங்களில் குளம், குட்டைகள் போலவும் இருப்பதை பயணிப்பவர்கள் அனைவரும் அறிவர்.  தஞ்சாவூர் கொடிமரத்து மூலை அருகில் சென்னை, கும்பகோணம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் செல்லும் முக்கிய சாலையில் பக்கத்து பக்கத்தில் இரண்டு டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது அதற்கு வெளியிலேயே பாதாள சாக்கடை பராமரிப்பு சீர் கேட்டால் மிகப்பெரிய பள்ளங்கள் பல நாட்களாக இருந்திருக்கிறது, அதனால் விபத்துகளும் தொடர்ந்து நடைபெறுமாம் அந்த நேரங்களில் மட்டும் தற்காலிகமாக மண்ணைப் போட்டு மூடுவது போல் பாசாங்கு செய்துவிட்டு சென்று வடுவார்களாம், அது சில நாட்களிலேயே பழைய நிலைக்கு வந்துவிடுமாம், அதைப்போல ஏறக்குறைய 10 நாட்களுக்கு மேலாக பெரிய பள்ளம் இரண்டு இடத்தில் இருந்திருக்கிறது அதில் சில விபத்துகளும் நடந்ததாக கூறப்படுகிறது அதைப்போல நேற்று இரவு கொடிமரத்து மூலையில் இருந்து கரந்தைச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றவரின் […] - [தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அருமையான அரசு உதவி பெறும் பள்ளி](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-64/): மாநாடு 03 June 2025 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தென்னமநாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராம விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கம் மற்றும் உயர்கல்வி பள்ளியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி தாய் தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு நிரந்தரமான கல்வி தங்கள் பள்ளியில் இலவசமாக வழங்கப்படும் என அந்த பள்ளி தாளாளர் உறுதி அளித்தார். மேலும் எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் ஐ ஏ எஸ் அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், இன்ஜினியர்களாகவும் அரசு அலுவலகத்தினராக படித்து மேன் மெலும் வளர்ந்து இந்த பள்ளிக்குபெருமை சேர்த்துள்ளனர். அதேபோன்று வருகின்ற காலத்தில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு இலவசமாக படிப்பில் 100% வெற்றி பெற்று உயர பள்ளி ஆசிரிகள் மற்றும் ஸ்ரீ ராம விலாஸ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் உறுதுணையோடு,துணையாக இருப்போம் என அந்தபள்ளியின் தாளாளர் சிவ. ராஜேஷ் கண்ணா தெரிவித்தார். மேலும் ஜீன் .2ம் […] - [தஞ்சாவூர் மாவட்டத்தில் 123 கிலோ குட்கா பறிமுதல் குற்றவாளி அதிரடி கைது](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-63/): மாநாடு 02 June 2025 சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 123 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று 01.06.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கவேல் நகர் 2 வது தெருவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து டீ மற்றும் காபித்தூள் விற்பனை செய்வதை போல் குட்கா விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனவேந்தன் தலைமையிலான பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை காவலர்கள் அடங்கிய குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் பட்டுக்கோட்டை சஞ்சை நகரைச் […] - [தஞ்சை ராஜ வீதிகளில் பெருமாள் வீதி உலா கருட சேவை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-62/): மாநாடு 02 June 2025 திருத்தஞ்சை துவாதச கருட சேவை மகோற்சவம் வரும் ஜூன் 15 அன்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் தொடங்கி ஜூன் 16 அன்று காலை 6 மணிக்கு பெண்ணாற்றங்கரையில் இருந்துநீலமேகப் பெருமாள் ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள், பெருமாள் ஸ்ரீ வீர நரசிம்மன் , கருட வாகனத்தில் காட்சி கொடுப்பார்கள் இவர்களைத் தொடர்ந்து மற்ற 22 பெருமாள்கள் தஞ்சை மாநகரின் நான்கு ராஜ வீதிகளில் கருடசேவை நடைபெறும், 17.6.25.. அன்று தஞ்சை மாநகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வெண்ணைத்தாளி சேவை நடைபெற இருக்கிறது.  - [தஞ்சாவூரில் 3ம்தேதி விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-61/): மாநாடு 02 June 2025 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் மாநில மாநாடு தஞ்சாவூரில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடாக வரும் 3ம் தேதி நடக்கிறது என மாநிலத் தலைவர் பழனியப்பன் தெரிவித்தார். இது குறித்து தஞ்சாவூரில் நிருபர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் மாநில மாநாடு வரும் 3ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கிறது. இந்த மாநாடு விவசாயிகளை கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்படுகிறது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில் நடக்கும் விவசாயிகளின் பேரணியை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் இருந்து தஞ்சை சரக டிஐஜி ஜியாஉல்ஹக் துவக்கி வைக்கிறார். மாநாட்டில் தஞ்சை மாநகர தலைவர் புண்ணிய.காமராஜ் வரவேற்புரையாற்றுகிறார். மாநில பொருளாளர் வீரப்பன் சங்க கொடி ஏற்றுகிறார். பொதுச் செயலாளர் செந்தில்குமார் கண்காட்சி அரங்கத்தை திறந்து வைக்கிறார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மணி தலைவர்களின் படத்தை […] - [தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியா? சுமார் சிட்டியா ? நடவடிக்கை எடுக்க ஆணையர் போதுமா? முதல்வர் வரணுமா ..](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-60/): மாநாடு 31 May 2025 தமிழ்நாட்டில் பல நகரங்களும் நாறி கிடப்பதற்கு முதன்மையான காரணமே நகரமைப்பு அலுவலர்கள் தான் என்பது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு ஆய்ந்து சிந்தித்தால் அனைவருமே அறியலாம். ஏனெனில் எந்த கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றாலும், வீடுகள், கடைகள் கட்ட வேண்டும் என்றாலும், மேலும் பல வகைகளிலும் நகரத்தின் வடிவமைப்புக்கு வழிவகைகள் செய்து தருவது நகரமைப்பு அலுவலர்கள் தான் அதேபோல வருவதை வாங்கிக் கொண்டு எங்கு சாக்கடை ஓடினால் என்ன? சாலைகளில் மகளிர்கள், முதியவர்கள் , இளையவர்கள் வரை நடந்து செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடி இருந்தால் நமக்கென்ன?  வாகனங்களில் செல்பவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாத வகையில் சாலைகள் நெருக்கடியாக இருந்தாலும் நமக்கு கவலை இல்லை இங்கு முடிந்தவரை இருந்து சம்பாதிப்போம் இங்கிருந்து எங்கு சென்றாலும் இதே போல வேலையை செய்து துட்டு சம்பாதிப்பதையே தன் வாழ்நாளின் லட்சியம் என்று வாழும், வாழ்ந்த பல அதிகாரிகளாலும் […] - [லஞ்ச வழக்கில் சிக்கியவர்களை காப்பாற்ற அரசு அதிகாரிகள் மறைமுக உதவி உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-59/): மாநாடு 28 May 2025 கொஞ்சமும் அச்சமில்லாமல் லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்குவதே அரிதிலும் அரிது அவர்களைக் காப்பாற்றுவதே பெரும் பணி என நினைத்து பணியில் இருக்கும் மேலதிகாரிகள் லஞ்ச, ஊழல் முறைகேடு பேர்வழிகளை காப்பாற்றி வருகிறார்கள் இதற்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். கரூர் மின் வாரியத்தில் பணியாற்றியவர் சரவணன். இவர் உட்பட மூன்று பேர் சக தொழிலாளர் ஒருவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக 2011ல் கைதாகினர். சரவணன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க அவருக்கு மெமோ அனுப்பப்பட்டது. அவர் 10 ஆண்டுகள் கழித்து 2021ம் ஆண்டு மெமோ அனுப்பி உள்ளனர். இது சட்டவிரோதம். எனக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார் இதனை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மின்வாரியம் […] - [அரிய கலைஞன், ஆழமான சிந்தனையாளன் நடிகர் ராஜேஷ் இயக்குனர் மு.களஞ்சியம் புகழஞ்சலி](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-58/): மாநாடு 29 May 2025 திரைப்பட நடிகர் பல்துறை வித்தகருமான ராஜேஷ் இயற்கை எய்ததையொட்டி திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் வெளியிட்டுள்ள புகழஞ்சலி.. அரிய கலைஞன், ஆழமான சிந்தனையாளன்: நடிகர் ராஜேஷ் மறைவு! நடிகர் ராஜேஷ் ஒரு அபூர்வமான கலைஞன். திரையில் தனது பங்களிப்பால் மட்டுமல்லாமல், ஒரு ஆழமான இடதுசாரி சிந்தனையாளராக, வரலாற்று அறிஞராக, பரந்துபட்ட வாசிப்பு கொண்ட ஒருவராக அவர் இருந்தார். ஒரு நடிகர் இத்தனை பரிணாமங்களைக் கொண்டிருப்பது அரிது. அத்தகைய ஒரு அரிதான திரைக் கலைஞனை இன்று நாம் இழந்துவிட்டோம். வெள்ளித்திரையில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், அவரது தனிப்பட்ட சிந்தனைகளின் ஒரு சிறு வெளிப்பாடாகவே இருந்தன. அவரது பேச்சுகளிலும், கட்டுரைகளிலும் வெளிப்பட்ட வரலாற்றுப் புரிதலும், சமூக அக்கறையும், இடதுசாரிச் சித்தாந்தங்களின் மீதான அவரது பற்றும் போற்றுதலுக்குரியவை. வெறும் வசனங்களைப் பேசுபவராக அல்லாமல், தான் நம்பிய சித்தாந்தங்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு கலைஞர் அவர். ராஜேஷ் அவர்களின் மறைவு, தமிழ் […] - [RTO சோதனைச் சாவடிகளில் சிக்கிய லஞ்சப்பணம் பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-57/): மாநாடு 28 May 2025 கோவை கந்தே கவுண்டன் சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆகிய இரு போக்குவரத்துத்துறை (RTO) சோதனைச் சாவடிகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் 2,13,640 ரூபாய் பறிமுதல் செய்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த சோதனையின் போது கந்தே கவுண்டன் சோதனைச் சாவடியில் 1,47,560 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 1 லட்சம் ரூபாய் சேமிப்பு அறையில் இருந்த பிரிண்டருக்குள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. மேஜைகளில் 17,060 ரூபாய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அங்கு இருந்த ரேக்குகளில் 30,500 ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த சதீஷ் ஜெயச்சந்திரன் ,உதவியாளர் லோகநாதன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனை சாவடியில் […] - [சீமான் கண்டன அறிக்கை தவெக உதவியது குற்றமா சரமாரி கேள்வி](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-56/): மாநாடு 28 May 2025 சென்னையில் தீ விபத்து ஏற்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது அவ்வளவு பெரிய குற்றமா தமிழக வெற்றி கழகத்தின் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏன் சீமான் பல கேள்விக்கணைகளோடு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை  சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த  மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.  தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக திமுக அரசு காவல்துறையை ஏவி கடுமையாகத் தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். சனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்வரை அனைவருமே மக்களுக்குத் தொண்டு செய்யும் சேவகர்கள்தான் எனும்போது […] - [விஜய் கொந்தளிப்பு தமிழ்நாட்டில் நடப்பது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சியா..](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-55/): மாநாடு 27 May 2025 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழக அரசை நோக்கி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் கேள்விக்கணைகளும் கீழ்கண்டவாறு சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர். இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் […] - [தஞ்சையில் பாஜக சார்பில் ஊர்வலம் எச்.ராஜா பங்கேற்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-54/): மாநாடு 26 May 2025 நேற்று மாலை தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியும், மரியாதையும் செலுத்தும் வகையில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் தஞ்சையில் நடந்தது.  ஊர்வலத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மூத்த தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான எச்.ராஜா கலந்து கொண்டார். தப்பாட்டத்துடன் இந்த ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் விநாயகம், முரளிதரன், அம்ரீத்அரசன், நெப்போலியன் பொதுச்செயலாளர் வீரசிங்கம், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மருத்துவப்பிரிவு மாநில செயலாளர் பாரதிமோகன், மாவட்ட செயலாளர் புண்ணியமூர்த்தி, நெசவாளர் பிரிவு மாநில துணைத் தலைவர் உமாபதி மற்றும் பலர் கலந்து கொண்டு கையில் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். […] - [தஞ்சை மலர் வணிக வளாகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-53/): மாநாடு 24 May 2025 தஞ்சை மலர் வணிக வளாகம் முதலாம் ஆண்டு நினைவு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா யாகசாலை பூஜையுடன் மிகவும் விமர்ச்சியாக தொடங்கியது. தஞ்சை – நாகப்பட்டினம் சாலை தொல்காப்பியர் சதுக்கம் அருகில் தஞ்சை மலர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த மலர் வணிக வளாகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தொடக்கத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. அப்போது பட்டீஸ்வரம் குருக்கள் கலந்து கொண்டு யாக சாலை நடத்தினர். அப்போது விவசாயம் செழிக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டும். பூ மற்றும் மாலைகள் வாங்குவதற்கு அதிக வாடிக்கையாளர்கள் வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதமான வேண்டுதல்கள் யாகசாலையில் குருக்கள்களால் போதிக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் உள்ள பூ மற்றும் மாலைகள் சில்லறை மற்றும் மொத்த விற்பனைகள் நடைபெற்று […] - [கலைஞர் வீடு வேணுமா காசு கொடு பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-52/): மாநாடு 20 May 2025 கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025 – 26ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்காக பயனாளிகள் தேர்வு தற்போது வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் ஒன்றியம், பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் அன்பழகன் என்பவர் தனக்கு வீடு கிடைக்காத ஆதங்கத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நான் திமுக இருக்கிறேன். எனக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். தேர்தல் வந்தால் திமுக வேட்பாளருக்காக ஒண்ணாவது பட்டனில் போடு, இரண்டாவது பட்டனில் போடு என ஓட்டு போடுவதற்காக பிரசாரம் செய்து, ஓட்டு கேட்டு ஜெயிக்க வைத்தால், இப்போது என்னிடம் 30 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள் எப்படி இது? என்ன நியாயம் என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொத்தனார் வேலை செய்யும் குடிசை […] - [தஞ்சையில் கல்வி காவலருக்கு புகழஞ்சலி](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-51/): மாநாடு 18 May 2025 மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்ல, பண்பாட்டையும் போதித்தவர், கல்வி காவலர் துளசி அய்யா வாண்டையாரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்  புகழஞ்சலி நிகழ்ச்சி நேற்று தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பூண்டி கிராமத்தில் டெல்டா மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்காகவும் சமூகத்தின் பொது அறிவிற்காகவும் வீரையா வாண்டையார் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களால் 1956 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது பூண்டி புஷ்பம் கல்லூரி. இவர்களது மறைவிற்கு பிறகு தந்தையர்களின் கல்விப் பணியை தொடர்ந்து எடுத்து நடத்தியவர் துளசி அய்யா வாண்டையார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூரை மையமாக வைத்து 10 மாவட்டங்களின் மாணவர்கள் பெரும்பாலாவர்கள் இந்த கல்லூரியில் படித்தவர்கள். கல்வி அறிவு கிடைக்காத நேரத்தில் பூண்டி புஷ்பம் கல்லூரியின் மூலம் தாழ்த்தப்பட்ட, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாணவர்கள் அனைவரும் கல்லூரி கல்வியை பெற்றனர். அன்றைக்கு இருந்த […] - [லஞ்சம் கைநீட்டிய வீஏஓ கைது பரப்பரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-50/): மாநாடு 16 May 2025 எத்தனை பேரை கைது செய்தாலும், கவர்மெண்ட் அலுவலகத்தில் அதிகாரிகள் முதல் அடிப்படை அலுவலர்கள் வரை கைநீட்டி லஞ்சம் வாங்குவதை சமீப காலமாக கௌரவமாகவே கருதுகிறார்கள் என்பதை பல்வேறு துறையினரின் கைது கண்முன்னே காட்டுகிறது அதிலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பக்காவாக லஞ்சம் விளையாடும் என்பதும், தாசில்தார் அலுவலகத்தில் தாராளமாக லஞ்சம் நிறைந்து ஓடும் என்பதும் அங்கு செல்லும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே அதே போல கடலூர் மாவட்டத்தில் விஏஓ வாங்கும் சம்பளம் பத்தாது என்று லஞ்சத்துக்கு கைநீட்டி கைதாகி இருக்கிறார் என்ன நடந்தது என்பதை பார்ப்போம் ; கடலூர் மாவட்டம் தொரவலூர் கிராமம் அருகே ஆலமரம் தெருவை சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம் பழமலை என்பவருக்கு சொந்தமான தொரவலூர் கிராமத்தில் உள்ள நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார் . வேலாயுதத்தின் நிலத்தை அளந்து காட்ட ஏற்பாடு செய்வதற்கு தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் […] - [தஞ்சையில் அதிமுகEx எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-49/): மாநாடு 16 May 2025 தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏவும், தற்போது அமமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கின்ற எம்.ரெங்கசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் தறையினர் இன்று காலை 7 மணியிலிருந்து சோதனை நடத்தினர் அதன் விவரம் பின்வருமாறு ; தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை, பூண்டி அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ரெங்கசாமி. இவர் தற்போது தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருகிறார். அதிமுகவில் இருந்த இவர் தஞ்சாவூரில் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக ஆனார். அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற இவர் டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். அதன் பிறகு தகுதி இழப்புக்கு உள்ளான 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து அமமுகவில் துணைப் பொதுச் செயலாளரானார். இவர் தஞ்சாவூர் […] - [தஞ்சையில் திருவுருவப்பட திறப்பு நிகழ்வு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-48/): மாநாடு 15 May 2025 தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை சபையர் மகாலில் தஞ்சாவூர் பார் அசோசியேஷன் அலுவலக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் முன்னாள் மூத்த வழக்கறிஞரும், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். சிங்கரவடிவேல் திருஉருவப்படத் திறப்பு விழா நடைபெற்றது. அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்து உருவப்படத்தினை திறந்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) எஸ். ராஜேஸ்வரன், மத்திய அரசின்முன்னாள் நிதித்துறை இணை அமைச்சரும், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் அட்வகேட் ஜெனரலும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஏ.நவநீதகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாட்டின் கூடுதல் அட்வகேட் ஜெனரல்.கே. சந்திர மோகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள். தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் ஆர்.திராவிடச்செல்வன் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, […] - [கட்டும் போதே இடிந்து விழுந்த கலைஞர் கனவு இல்லம், பலே திட்டமா ? பல் இழிக்கும் திட்டமா ?](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-47/): மாநாடு 12 May 2025 அரசின் திட்டங்கள் என்றாலே அப்படி இப்படி ஐத்தாலக்கடி என்றுதான் இருக்கிறது என்பதை அனுபவிப்பவர்கள் அறிவார்கள், அதிலும் திமுக ஆட்சியில் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்துமே அறிவிப்பில் அழகாகவும் நடைமுறையில் அலங்கோலமாகவும் இருக்கும், இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது கலைஞர் கனவு இல்ல திட்டம். இந்தத் திட்டத்தைப் பற்றி திமுகவினர் மார்தட்டி மாபெரும் சாதனையாக கூறும் போது ஏழை எளிய மக்கள் குடிசைகளில் வாழ்வதை பொறுக்க முடியாமல் அனைவரும் கான்கிரீட் வீட்டில் வாழ்வதை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்றும் இது திமுக தலைவர் கருணாநிதியின் கனவு என்பதால் கண்ணும் கருத்துமாக கழக அரசு நிறைவேற்ற துடிக்கிறது என்று பேசுகிறார்கள் ஆனால் நிஜத்தில் நிகழ்வது என்ன என்று தெரியுமா? கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒரு வீட்டுக்கு ஒதுக்கப்படும் தொகை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இதில் 360 சதுர அடி வீடு கட்டிக் […] - [தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஒரு சாதனை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-46/): மாநாடு 09 May 2025 தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் 12 12 வயது சிறுமிக்கு வயது சிறுமிக்கு வளைந்த முதுகு தண்டுவடத்தை சரி செய்வதற்கான ஸ்கோலியா சீஸ் அறுவை சிகிச்சையை டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பார்த்திபன், சண்முகஹரி,பாலகுருநாதன், மயக்கவியல் துறையின் முதுநிலை டாக்டர்கள் அரிமாணிக்கம், வினோதா தேவி ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் மேற்கொண்டு சாதனை. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை தலைவர் மருத்துவர் குருசங்கர் கூறுகையில், தமிழகத்தின் டெல்டா பிராந்தியத்தில் உலகத்தரமான மருத்துவ சேவை வழங்குவது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதால் தற்போதைய அறுவை சிகிச்சையின் வெற்றி அதற்கு அடிகோலிட்டு காண்பித்திருக்கிறது என்றார். இதுகுறித்து முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில் டெல்டா மாவட்டங்களில் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக தனிப்பிரிவை நடத்தி வருவது மீனாட்சி மருத்துவமனை ஒன்றே என்றார்.மீனாட்சி மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பிரவீன் உடனிருந்தார். செய்தி […] - [தஞ்சாவூர் அரசு மருத்துவமனை அவல நிலை அமைச்சர் மா.சுப்ரமணியன் முதல்வருக்கு இகழ் சேர்ப்பாரா? புகழ் சேர்ப்பாரா..](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-45/): மாநாடு 09 May 2025 தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காமராசர் முதலமைச்சர் ஆக இருந்தபோது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பொறுப்புணர்வோடு பார்த்து பார்த்து கட்டப்பட்டது. நிலப்பரப்பு ஏறக்குறைய 110 ஏக்கர் நிலத்தை அன்று மக்களின் நலன் கருதி கொடுத்தனர். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறது, காப்பாற்றிக் கொண்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக வேலை நடைபெறுவதாக கட்டிடங்கள் கட்டப்படுவதாக ஏனோ தானோ என்று கட்டுமானங்களை செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல் தங்களுக்கு ஒதுக்குவதையே குறிக்கோளாக கொண்டிருப்பதால் நடக்க சரியான பாதையும் இல்லை குண்டும் குழியுமாக குளம் போல இருக்கிறது மழைக்காலங்களில், வெயில் காலங்களில் பள்ளத்தாக்கில் நடப்பது போல பள்ளம் மேட்டில் தான் நடக்க வேண்டி இருக்கிறது, குடிக்க குடிநீரும் இல்லை நோயாளிகள் படுத்து மருத்துவம் […] - [லஞ்சம் மட்டும் போதாது மஞ்சத்துக்கும் வா என்று அழைத்த காவலர், பெண் புகார் விசாரணை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-44/): மாநாடு 07 May 2025 இரவு பகல் பாராமல் பணியாற்றி மக்களுக்கு தொண்டாற்றும் காவலர்கள் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுத்த பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த காவலரின் செயல் அருவருக்கத் தக்க வகையில் இருந்துள்ளது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்; ஆவடியில் தொலைந்து போன பைக்கை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த பெண் கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக இது குறித்து ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பைக் திருட்டு குறித்து […] - [தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய அக்கப்போரு சரி செய்வாரா மாவட்ட ஆட்சியர்](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-43/): மாநாடு 07 May 2025 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பெயரில் மட்டும்தான் மக்கள் பயன்படுத்துவதற்காகவும் பேருந்துகள் சேவை புரிய கட்டப்பட்டதாகவும் தெரிய வருகிறதே தவிர, பேருந்து நிலையத்தை கடை நடத்துவதற்காக கட்டப்பட்ட வணிக வளாக பகுதியில் ஏதோ பயணிகளும் பயன்பெறட்டும் என்கிற வகையில் பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கியது போல தான் இருக்கிறது நேரில் காண்பவர்களுக்கு, ஏனெனில் பேருந்து நிலையத்தில் நடைபாதை வரை கடைகளின் ஆக்கிரமிப்பு இருப்பதையும் பயணிகள், பொதுமக்கள் , மாணவ மாணவிகள், முதியோர்கள், தாய்மார்கள் நடக்க கூட இடமில்லை என்பதையும், மழை, வெயில் எது வந்தாலும் கால் தடுக்க நிற்க கூட இடமில்லை என்பதை கண்ணிருக்கும் யாவரும் காண முடியும் இதைக் கண்டும் காணாமலும் இருப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் இந்த பகுதியின் சுகாதார ஆய்வாளர் எபின் சுரேஷ் , திருமுருகன் RI முதல் அவர் வரை பணம் பெற்றுக் கொள்கிறார்கள் அதனால்தான் மக்களின் பயன்பாட்டிற்காக மக்களின் பணத்தில் […] - [தஞ்சாவூர் விஏஓ வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பரபரப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-42/): மாநாடு 07 May 2025 நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷ்யா பேகம் இவர் இதற்கு முன் துனேரி மற்றும் நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் நேற்று உதகை பாலிடெக்னிக் அருகே வாடகை வீட்டில் வசித்து வரும் ரஷ்யா பேகம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தூனேரி கிராமத்தில் தனது தம்பி பெயரில் வீடு கட்டி உள்ளதாகவும், அதேபோல் தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியில் வீடு மற்றும் கார் வாங்கியுள்ளதாக தெரிய வந்ததாக கூறப்படுகிறது, விஏஓ ரஷ்யா பேகம் தனது பதவியை பயன்படுத்தி 50 லட்சத்திற்கும் மேல் ஊழல் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. - [கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு மே10ல் நடைபெறுவதையொட்டி பெ.மணியரசன் பத்திரிகையாளர் சந்திப்பு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-41/): மாநாடு 06 May 2025 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர். நமது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டு மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், மாநிலங்களுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்கான வல்லுநர் குழு அமைத்துள்ளார். இந்திய அரசமைப்பு சட்டம் 1950-ல் செயல்பாட்டுக்கு வந்தபின் 1951 முதல் இதுவரை சுமார் 106 முறை திருத்தப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் மேலும் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கானவை அல்ல. ஆங்கிலேய ஆட்சியில் மாநில அரசுகளிடம் இருந்த அதிகாரங்களை பறிப்பதற்கானவை. ஆங்கிலேயர் ஆட்சியில் 1937-ம் ஆண்டு முதல் மாநில அரசிடம் இருந்துவந்த விற்பனைவரி உரிமையை நீக்கி, அதனை இந்திய அரசின் சரக்கு சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி) சேர்த்துவிட்டனர். […] - [ஆட்டையை போட்டாரா அமைச்சர் வழக்கில் மா.சுப்ரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-40/): மாநாடு 06 May 2025 சென்னை மாநகராட்சி மேயராக மா. சுப்பிரமணியன் இருந்தபோது வேறொருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி உள்ளதாக  தொடுக்கப்பட்ட வழக்கின் இன்று வந்தபோது சிறப்பு நீதிமன்றம் மா. சுப்பிரமணியனுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது அதன் விவரம் பின்வருமாறு; சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை தற்போது அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியுள்ளதாக பார்த்திபன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்ததையொட்டி பல்வேறு பிரிவுகளின் கீழ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீதும் சிபிசிஐடி காவலர்கள் வழக்குப் பதிவு செய்தார்கள். இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு காவல் துறை […] - [சிலை கடத்தல் வழக்கு பொன்.மாணிக்கவேலுக்கு 1 வாரம் கெடு உச்சநீதிமன்றம் உத்தரவு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-39/): மாநாடு 05 May 2025 தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து மாயமான சிலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவரின் பாஸ்போர்ட்டை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது விபரம் பின்வருமாறு,  தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக பொன்மாணிக்கவேல் இருந்தபோது சிலை கடத்தல் வழக்கில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்ட தீன தயாளனை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க உதவியதாக சிபிஐ பொன்மாணிக்கவேல் மீது வழக்கு தொடர்ந்தது அதனையொட்டி பொன்‌.மாணிக்கவேல் முன் ஜாமின் கேட்டிருந்ததற்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கு விசாரணையின் போது சிபிஐ தரப்பிலிருந்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பொன்மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதால் வழக்கின் விசாரணை தடை படுகிறது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. பொன் மாணிக்கவேல் […] - [தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அதிரடி 1207 மது பாட்டில்கள் பறிமுதல்,விற்றவர்கள் கைது, எஸ்.பி.பாராட்டு](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-38/): மாநாடு 02 May 2025 சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு 1207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி நேற்று 1.05.2025 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசால் மது பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரத்தநாடு உட்கோட்டம் திருவோணம் காவல் நிலையத்திற்குட்பட்ட ஊரணிபுரம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்ட திருவோணம் வெட்டுவக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் திருவோணம் புதுவிடுதியைச் சேர்ந்த அரவிந்தன் ஆகியோரை கைது செய்து அவர்கள் விற்பனைக்கு […] - [பொன்முடி தீவிர ஆதரவாளர்கள் வைத்த தீ](https://maanaadu.in/arasiyal-maanaadu-news-37/): மாநாடு 28 April 2025 பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் திமுக நிர்வாகி தி.எடையார் குணா மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பாக்யராஜ் ஆகியோர் போதையில் அவர்களது இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.. ## Pages - [](https://maanaadu.in/8325-2/) - [News | செய்திகள்](https://maanaadu.in/news-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/) - [Client Portal](https://maanaadu.in/clients/): [jetpackcrm_clientportal] - [For Advertisement](https://maanaadu.in/for-advertisement/): Contact us for advertisement : 9843866141 or maanaadu.in@gmail.com வணிக விளம்பரங்கள் | அரசியல்வாதிகள் | சமூக ஆர்வலர்கள் | சாதனையாளர்களின் பேட்டிகள் மாநாடு செய்தி ஊடக குழுமத்தில் | Maanaadu Media House ல் வெளியிட : 96297 09999 editor.maanaadu@gmail.com | maanaadu.in@gmail.com - [Disclaimer](https://maanaadu.in/disclaimer/) - [Contact Us](https://maanaadu.in/contact-us/): WhatsApp :  96297 09999 Mail : maanaadu.in@gmail.com | editor.maanaadu@gmail.com 🌐 Maanaadu News Media  – Official Links 👇 www.maanaadu.in 🔴 YouTube – Arasiyal Maanaadu https://www.youtube.com/@Arasiyalmaanaadu 🔴 YouTube – Maanaadu 7592 https://www.youtube.com/@maanaadu7592 📸 Instagram https://www.instagram.com/ramkumar_maanaadu_media_house 🧵 Threads https://www.threads.com/@ramkumar_maanaadu_media_house 🐦 X (Twitter) https://x.com/thambi2627 💛 ShareChat https://sharechat.com/profile/maanaadumedia?d=n 📘 Facebook – Ramkumar https://www.facebook.com/maanaaduramkumar 📘 Facebook – Editor Ramkumar https://www.facebook.com/EditorRAMKUMAR 🌎 Official Website Home உங்கள் பேட்டிகள், உங்கள் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் “மாநாடு செய்தி ஊடக குழுமம் | Maanaadu News Media - [About Us](https://maanaadu.in/about-us/): மாநாடு செய்தி ஊடகம் ! அரசியல், சமூக பிரச்சனை, அறிவியல், கலாச்சாரம், விளையாட்டு, சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம் | Maanaadu News Media A Tamil media channel focusing on, Politics, Social issues, Science, Culture, Sports, Cinema, and Entertainment. அறிவு —- கல்வி | வயிறு —- விவசாயம் | உயிர் —- மருத்துவம் “சுகாதாரம்”  இவற்றிற்கு எவராலும் தீங்கு நேராமல் காத்து மக்களின் அரணாக நிற்கிறது மாநாடு ! மாநாடு செய்தி ஊடக குழுமம் வெற்றி பெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது… மாநாடு வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்! கணக்கு பெயர்: RAMKUMAR K வங்கியின் பெயர்: STATE BANK OF INDIA வங்கி கணக்கு எண்: 20017910058 IFS Code: SBIN0070419 GPay : 96297 09999 நன்றி. நேசத்துடன் : […] - [Feedback](https://maanaadu.in/feedback/) - [Home](https://maanaadu.in/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)