மாநாடு 23 February 2025
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊமத்தநாடு கிராமத்தில் தான் இந்த கிராம ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் 2015முதல்2024 வரையில் வித விதமான ஊழல் நடைபெற்றுள்ளது என்பதும் இதனை ஆய்வு செய்யாமல் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக இருப்பது தான் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியான சம்பவமாக உள்ளது, அதே ஊமத்தநாடு கிராம பஞ்சாயத்து பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் ஒருவர் ஊமத்தநாடு கிராமத்தில் நடைபெற்ற ஊழலை ஆதரபூர்வயாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவோ ஆய்வு செய்யவோ இல்லை என்கிறார்
சமூக ஆர்வலர் கார்த்திக்,
இதனை சமூக ஆர்வலர்கள் நேரடியாகவே செய்த விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால், பெரியாத்திக்கோட்டை மற்றும் பெத்தனாட்சிவயல், கிராம பகுதியில் பாமர மக்களுக்கு தெரியாமல் வீடுகளே கட்டாமல் பயனாளீகள் பெயரில் வீடுகள் கட்டிவிட்டதாக கூறி பணம் எடுத்துள்ளனர், எப்படி இது சாத்தியம் என்று பார்த்தால் , பெரியாத்திக்கோட்டை,தங்கவேல், ரவி, பெத்தனாட்சி வயல் கிராமத்தில், பாலம்மாள் திருஞானம்,மாணிக்கம் திருஞானம் ஆகிய நபர்கள் பெயரில் வீடு கணக்கு காட்டி கட்டாத வீட்டிற்கு வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்து உங்கள் வங்கியில் மாறுதலாக பணம் ஏறிவிட்டது அதனை எடுத்து தாருங்கள் என்று அவர்களையும் ஏமாற்றி பணத்தை ஆட்டைய போட்டு ஊழல் செய்துள்ளனர், இன்னும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வெளியூரில் இருந்து வரும் நபர்கள் பெயரில் வேலைக்கு வந்ததாக கூறி பல லட்சங்களை எடுத்து அரசுக்கு டிகிக்கி கொடுத்து விட்டதாகவும் குலாம்கனி ஊராட்சி மன்ற தலைவாராக இருந்த போது பல்வேறு வகையான கிராம நிதியில் கையாடல் செய்துள்ளதாகவும் அவருடன் அப்போது இருந்து வருந்த கிராம ஊராட்சி செயலாளராக இருந்த ராஜ வேலு, ஊராட்சி மன்ற தலைவராக இருந்த குலாம்கனி, ஆகியநபர்கள் தான் இந்த முக்கியமாக ஊழல் நடைபெற்றதற்க்கான காரணம் என்று கூறுகின்றனர், குலாம்கனியோ எனக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி முடிவடைந்து விட்டது என்னை ஒன்றும் செய்ய முடியாது வட்டார வளர்ச்சி அலுவலரும் ஊராட்சி செயலர் பார்த்துக் கொள்வார்கள் என்று மார்த்தட்டி வருகிறார், ஊமத்தநாடு ஊராட்சி செயலராக இருந்த ராஜ வேலு என்ன சொல்லிவருகிறாராம் நான் உயர்பதவிக்கு போக போகிறேன்,என்னைய ஒன்றும் செய்ய முடியாது என்கிறாராம் அப்போ இங்கே நடந்த ஊழல் யார் பொறுப்பு என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியாக உள்ளது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 2014 ஆண்டில் இருந்து தற்போது 2024 வரையிலான வீடு திட்டங்களில் பயனடைந்த நபர்களை நேரடியாக விசாரணை செய்தால் தான் ஊமத்தநாடு ஊராட்சியில் நடந்துள்ள ஊழல்களை வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்கள், அப்போது ஊழல் உறுதிபடுத்தும் நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குலாம்கனி மற்றும் ஊராட்சி செயலராக இருந்த ராஜவேலு மற்றும் ஊழலுக்கு துணைசென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் ஊராட்சியில் ஊழல் செய்து விட்டுமொத்தமாக சுருட்டி சென்றதாக கூறப்படும்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குலாம்கனி மற்றும் ஜபார் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து அவர்கள் சொத்துக்களை அரசுடைமை ஆக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வாளர்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது, நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பொறுத்திருந்து பார்ப்போம்..
செய்தி – அருள்