Spread the love

மாநாடு 16 July 2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்திருக்கிறார், தமிழக அரசு உத்தரவிட்டு, உரிய விசாரணை நடத்தி பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஒரத்தநாட்டில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஒரத்தநாடு ஒன்றியம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தமிழக அரசிற்கு இவ்வாறான கோரிக்கைகள் வைக்கப்பட்டது:

பள்ளி நிர்வாகத்தினரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

பள்ளியை முழுவதுமாக இழுத்து மூடவேண்டும்

RTO முழு விசாரணை வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவி பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் குழந்தைகள் மரணம் பள்ளி ,கல்லூரியில் நிகழாதவன்னம் அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் 2004 ஆம் ஆண்டு ராஜா என்கிற மாணவன் இதே பள்ளியில் இறந்தார். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஒரு மாணவி இதை பள்ளியில் இறந்தார், இந்தப் பள்ளியில் மாணவிகளின் இறப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது , இதனை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும், அதேபோல தற்போது மர்மமான முறையில் இறந்த

சகோதரி ஸ்ரீ மதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், அதற்காக மற்றும் ஒரு முறை உடற்கூறாய்வு செய்து அதன் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரின் அறிவுறுத்தல் படி இன்று ஒரத்தநாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கூறினார்கள்.

43920cookie-check12 ஆம் வகுப்பு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒரத்தநாட்டில் மூமுக ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!