மாநாடு 14 April 2025
தஞ்சாவூர் இரயில்வே நிலைய நுழைவாயில் முகப்பில் இருந்த உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில்

இருந்த இடத்தில் தற்போது வடநாட்டு மந்திர் கோவில் இடம் பெற்றுள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது : இரயில்வே நிலையங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு ஒன்றிய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு இரயில்வே துறை நிர்வாகம் தமிழ்நாட்டில் பல்வேறு இரயில் நிலையங்களை புதுப்பித்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் இரயில்வே நிலையம் புதுப்பிக்கும் வேலைகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது இரயில்வே நிலையம் பல்வேறு வசதிகளுடன், பொலிவுடன் காட்சியளிப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தஞ்சாவூர் இரயில்வே நிலைய முகப்பில் இருந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும், உலகப் பிரசித்தி பெற்ற, யுனஸ்கோ நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் தஞ்சாவூர் பெரிய கோயில் புதுப்பிக்கப்படும் முன் இரயில்வே நிலையம் முகப்பில் இருந்தது. தற்போது பெரிய கோவில் இருந்த இடத்தில்

வடநாட்டு மந்திர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ் மொழி, பண்பாட்டு கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அனைத்து வழிகளிலும் எடுத்து வருகிறது. தமிழ் மொழிக்கு எதிராக மனுதர்ம சனாதன கொள்கைகளை அமல்படுத்த முயற்சி செய்கிறது. அந்த அடிப்படையில் தமிழ் மன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் கட்டிடக்கலை, ஜனநாயக நிர்வாக முறை, தமிழர் பண்பாடு, கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த பெருமைகளை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு பெரிய கோயில் இருந்த இடத்தில் வடநாட்டு மந்திர் கோவில் அமைத்திருப்பது தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தின் மீதான சனாதான பண்பாட்டு திணிப்பாகவே உள்ளது என்பதையும்,
இது தமிழர்களின் மனங்களை வேதனைப் படுத்துவதாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரான வடநாட்டு மந்திர் அமைத்திருப்பதை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சாவூர் ரயில்வே நிலைய புதுப்பிக்கும் பணிகள் இன்னும் முடியலை முடிவடையவில்லை உடனடியாக ஒன்றிய அரசும், இரயில்வே துறை நிர்வாகமும் மந்திர் கோவிலை எடுத்து விட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலை முகப்பில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை வலியுறுத்தி வருகிற நாளை மறுநாள் 16ஆம் தேதி காலை 10-30மணிக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒன்று திரட்டி வலிமையான போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள்,ஜனநாயக சக்திகள் பங்கேற்று சிறப்பிக்க உலகத்தமிழர் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கிறோம் என்று

அய்யனாபுரம் முருகேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
