Spread the love

மாநாடு 22 March 2025

இன்று காலையிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது அந்த வீடியோவில் ஒரு மளிகை கடையில் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருப்பார்

அவரின் அருகில் ஒருவர் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பார் அருகில் உள்ளவர்கள் வந்து என்ன ஏது என்று விசாரிக்கும் போது அவர் இதில் இடித்துக் கொண்டதால் ரத்தம் வருகிறது என்று கூறுவார் ரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தவர் இல்லை இல்லை இவர் தான் அடித்தார் என்று சொல்லும் அந்த காட்சி அனைவரையுமே அதிர்ச்சி அடைய செய்தது.

இது எங்கு நடந்தது ? எப்போது நடந்தது ? என்று அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை கடை தெருவில் மோகன்தாஸ் ஸ்டோர்ஸ் என்கிற கடையில் நேற்று மதியம் நடந்தேறி இருக்கிறது ரத்தம் சொட்ட சொட்ட நின்றவர் தான் அந்தக் கடையின் உரிமையாளர் மோகன் அவர் நேற்று மதியமே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அங்கு நடந்தது என்பதை மோகன் நம்மிடம் கூறினார், நேற்று மதியம் ஏறக்குறைய 2-30 மணி அளவில் கட்சிக்கொடி பறந்த காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் தனது கடைக்கு வந்து நான் கிரைம் பிரான்ச் காவலர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களை ஐயா அழைத்து வர சொன்னார் என்று அழைத்தாராம் அதற்கு இவர் மாலை 4 மணிக்கு வருகிறேன் என்று கூறினாராம். சரி இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்னை ஏதாவது கவனியுங்கள் என்று கேட்டாராம் அப்போது கடையின் உரிமையாளர் மோகன் 2000 ரூபாய் பணத்தை கொடுக்க எடுத்தபோது இங்கு கேமரா இருக்கிறது வெளியில் வந்து கொடுங்கள் என்று கடையின் வெளியே மோகனை அழைத்து இருக்கிறார் அதனை நம்பி கடையின் வெளியே வந்த மோகனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடும் தாக்குதல் நடத்தி இருக்கிறார் அந்தக் காவலர் அதனால் தான் கண்ணின் ஓரத்தில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டே இருந்திருக்கிறது, இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் வந்து நியாயம் கேட்டு இருக்கிறார்கள் அவர்களிடம் காவலர் நான் ஒன்னும் அடிக்கவில்லை அவர் இதில் இடித்துக் கொண்டு விட்டார் என்று சொல்லும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது இதை பார்ப்பவர்கள் அனைவரும் பதைப்பதைத்து போய் இருக்கிறார்கள். காவல்துறை உங்கள் நண்பன் என்பார்கள் காவலர்களுக்கும், பொது மக்களுக்கும் அதிக இடைவெளி இருக்கக் கூடாது அப்போதுதான் சட்ட ஒழுங்கு  கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், குற்றம் தவிர்க்கப்படும் என்பார்கள் ஆனால் இங்கு “வேலியே பயிரை மேய்ந்த கதையாய் ‘ நிகழ்ந்திருக்கிறது இந்த நிகழ்வு .
இதற்கு சரியான ஒரு தீர்வை இனி இதுபோல எங்கும் நடக்காது என்று பொதுமக்கள் நம்பும் படியான நடவடிக்கையை தஞ்சை மாவட்ட காவல்துறை எடுக்க வேண்டும் ? நடவடிக்கை எடுக்குமா பொருத்திருந்து பார்ப்போம்..


குறிப்பு : மோகனுக்கு கடந்த ஆறு மாதமாக நிலப் பிரச்சனை இருந்ததாகவும் அதன் பெயரில் அழைக்க வந்த காவலர் தான் அடாவடியாக அடித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்…

76970cookie-checkதஞ்சையில் காவலர் தாக்கியதில் ரத்தம் சொட்டியவர் மருத்துவமனையில் அனுமதி வைரல் வீடியோ பரபரப்பு..,
2 thoughts on “தஞ்சையில் காவலர் தாக்கியதில் ரத்தம் சொட்டியவர் மருத்துவமனையில் அனுமதி வைரல் வீடியோ பரபரப்பு..,”
  1. மேற்கண்ட நபர் மீதான 1.63 கோடி மோசடி புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணை செய்திட விசாரணக்கு ஆஜராக வேண்டி சம்மன் அளிக்க சென்ற போது சட்ட ரீதியான நடவடிக்கையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளும் முயற்சியில் தானாக கதவில் முட்டி காயத்தை ஏற்படுத்தி கொண்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். சம்மன் சார்பு செய்ய சென்ற காவலர் அவரை தாக்கவில்லை. இவர் மீது 1.63 கோடி மோசடி வழக்கு புலன் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!