மாநாடு 23 February 2025
தஞ்சையில் நேற்று தமிழ்நாடு தகவல் சட்ட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இதில் தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்தும், புகார் மனுக்கள் மற்றும் ஆர்.டி.ஐ விண்ணப்ப மனுக்கள் எழுதும் முறை, முதல் மேல் முறையீடு, இரண்டாம் மேல்முறையீடு, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து வக்கீல் பிரகாஷ் ராமலிங்கம் பயிற்சி அளித்தார். தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் தமிழக சாலை பயனீட்டாளர் நலக்குழு தலைவர் அய்யாரப்பன், க.இராம்குமார் அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழ், மாநாடு செய்தி குழுமம் ஆசிரியர் ,நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் முருகேசன், ஊழல் ஒழிப்போர் பாசறை ராஜ்மோகன், ஆழ்துளை பாசனம் விவசாயிகள் சங்கம் தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலாளர் துரை முருகேசன், தகவல் சட்ட ஆர்வலர் வள்ளி நாராயணன், பாசன சபை உறுப்பினர் சீனிவாசன், தமிழக விவசாயிகள் சங்கம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன், காவிரித் தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் அறக்கட்டளை அருசீர் தங்கராசு, ஏரிகள் மீட்பு குழு வக்கீல் அருட்செல்வன், சமூக ஆர்வலர் பாதுகாப்பு குழு ஹாஜா மைதீன், மானாவாரி விவசாயிகள் நல சங்கம் வைத்தியலிங்கம், பயனீட்டாளர் நலக்குழு ராமநாதன் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கண்டு பயிற்சி பெற்றனர்.
இந்த கூட்டத்தில், வைக்கப்பட்ட தீர்மானங்கள் 1.தமிழ்நாடு தகவல் ஆணைய வலைதளத்தை முழுமையாக ஆங்கிலம் மற்றும் தமிழில் மாற்ற வேண்டும்.2.2022-23, 2023-24 ஆண்டிற்கான தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கை வெளியிட வேண்டும். 3. பிரிவு 4(1) -ன் படியான தகவல்களை தமிழக அரசு ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும், 4.ஆர்.டி.ஐ ஆன்லைன் முறையில் நேரடியாக பொது அதிகார அமைப்புகளின் வலைத்தளத்தில் கொண்டுவர வேண்டும். பொது தகவல் அலுவலர்கள், மேல்முறை அமைப்புகளின் மேல்முறையீட்டு அலுவலர்களின் பெயர்களை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு தகவல் ஆணையம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் புனிதா ராமலிங்கம் நன்றி கூறினார்.