மாநாடு 07 January 2025
மழை, வெள்ளம் ,புயல் காற்று என்று எந்தச் சூழலிலும், எந்த பேரிடர் காலங்களிலும் சுழன்று மக்களை காக்க மகத்தான பணியை மேற்கொள்பவர்கள் மின்வாரிய ஊழியர்கள் என்றால் மிகையாகாது. சில மேல் அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும் , சிலரின் அலட்சியத்தாலும் சில விபத்துக்கள் ஏற்பட்டு கடும் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரும்புள்ளியாய் அமைந்துவிடுகிறது அதுபோல் நிகழாமல் இருக்க
தஞ்சாவூர் மின்வாரியம் பட்டுக்கோட்டை தாலுகா , தம்பிக்கோட்டை கிராமம் பரக்கலகோட்டையில் (தாமரன்கோட்டை) உள்ள மின்கம்பம் முழுவதுமாக சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து
இரும்பு கம்பிகள் மேற்கொண்டு வெளியே தெரியும் இந்த மின்கம்பம் எது மீது , யார் மீது எப்போது விழுந்து விபத்து ஏற்படுத்தும் என்று புரியாத
ஒருவித அச்ச உணர்வோடையே இதை அறிந்தும் அவ்வழியே செல்லும் பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் வேறு வழியின்றி எங்கு , எப்போது யாரிடம் முறையிடுவது என்று புரியாமல் பயணித்து வருகின்றார்கள். இந்த செய்தியை மாநாடு செய்தி குழுமத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள் , உயிர், உணர்வுகள் சம்பந்தப்ட்ட பிரச்சனை என்பதை உள்வாங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்து கொடுத்து
மக்களை காக்க வேண்டும் என்று மக்களின் சார்பாக மாநாடு செய்தி குழுமம் கேட்டுக்கொள்கிறது. மனது வைப்பார்களா ? மக்களை காப்பார்களா? சம்பந்தப்பட்டவர்கள்..