முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சீமான் வெளியிட்டார்
நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தனித்து களம் கண்டது. இந்த முடிவானது மே மாதம் 18ந்தேதி சனிக்கிழமை 2010 அன்று நாம் தமிழர் கட்சி மதுரையில் துவங்கிய போதே எடுக்கப்பட்டது.
எந்தவித தேசியக்கட்சிகளோடும் திராவிட கட்சிகளோடும் கூட்டணியே கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குறிப்பிட்டார்.
பேசியதற்கு ஏற்ப இதுவரை நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல், நாடாளுமன்றத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல்,என அனைத்து தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டது.இப்போதும் இனி எப்போதுமே நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்தே தான் போட்டியிடும் என்று சீமான் கூறியிருக்கிறார்.
இதனடிப்படையில் வருகிற பிப்ரவரி 19ந்தேதி நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக :
சென்னை மாநகராட்சி,
கரூர் மாநகராட்சி ,
திருநெல்வேலி மாநகராட்சி,
தாம்பரம் மாநகராட்சி ,
தஞ்சாவூர் மாநகராட்சி,
நாகர்கோவில் மாநகராட்சி,
திருப்பூர் மாநகராட்சி ,
திருச்சி மாநகராட்சி,
ஆகிய இடங்களுக்கு வேட்பாளர்பட்டியல் வெளியாகியுள்ளது.