Spread the love

மாநாடு 11 April 2022

மிகப்பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி உண்டியல் வசூலில் எப்போதும் கிங்காக திகழ்ந்து வருகிறார். எனினும், 2020ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலை தொடங்கியபோதும், அடுத்தடுத்த அலைகளிலும் திருப்பதியில் பக்தர்கள் வரத்தும், உண்டியல் வசூலும் குறைந்தது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன்பிறகு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பக்தர்கள் வரத்து கடகடவென உயர்ந்துவிட்டதாக திருப்பதி தேவஸ்தானம் வட்டாரத்தில் கூறுகின்றனர். பக்தர்கள் அலை மோதுவதால் உண்டியல் வசூலும் உயர்ந்துள்ளது.

கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் உண்டியல் வசூல் குறைந்துவிட்டது. ஆனால் தற்போது உண்டியல் வசூல் கணிசமாக உயர்ந்துவிட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர். ஆன்லைன் தரிசன டிக்கெட் விற்பனையும் சிறப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

300க்கும் மேற்பட்ட சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், தீவிர நோயால் அவதிப்படுவோர் போன்றவர்களுக்காக தேவஸ்தானம் டிக்கெட் விற்பனை செய்து வருகிறது.

இந்த டிக்கெட் விற்பனை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தினசரி 1000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முதியோர் மற்றும் நோயுற்றவர்களும் தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது.

இவர்கள் அனைவரும் தினமும் காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசையில் சென்று தரிசனம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் பிற்பகல் 3 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். இதற்கு ஏற்ப டிக்கெட் பதிவு செய்யும்படி பக்தர்களிடம் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது

30060cookie-checkதிருப்பதிக்கு இந்த நேரத்தில் வாருங்கள் தேவஸ்தானம் அழைப்பு

Leave a Reply

error: Content is protected !!