மாநாடு 24 May 2022
சுதந்திரத்திற்குப் பிறகு மே மாதத்தில் ஆற்றில் மணல் இல்லாமல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று காலை திறந்து வைத்தார். மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1934 ஆம் ஆண்டு அணை கட்டும் பணி முடிக்கப்பட்டது. பயிர் சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் ஆனால் கடந்த 88 ஆண்டுகளில் ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பாக இதுவரை 12 முறை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. அதில் 11 முறை சுதந்திரத்திற்கு முன்பாகவும் அதன் பிறகு கடந்த 2011ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு காரணமாகவும் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு ஜூன் மாதத்திற்கு முன்பாக மே மாதத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறை.
அதேபோல கடந்த 88 ஆண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது 18 முறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் நீர் திறப்பால் மொத்தம் 12 மாவட்டங்கள் பயன்பெறும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். கடந்த பல ஆண்டுகளாக அக்கறையற்ற ஆட்சி நிர்வாகத்திலும், அதிக பேராசையாலும் ,மணல் வளங்களை திருடி தின்னதாலும், ஆங்காங்கே கோரைப் புற்கள் முளைத்துள்ளது ,ஆங்காங்கே மணல் திட்டுக்கள் ஏற்பட்டுள்ளது இதனால் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக கடைமடைப் பகுதிக்கு செல்வதே இல்லை என்பதுதான் உண்மை. இதனை சரிசெய்யும் விதமாக சென்ற ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி தஞ்சாவூர் கல்லணை கால்வாயை பார்வையிட வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வெண்ணாறு ,பகுதிகளில் தூர்வாரப்பட்டு கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதன்படி போர்கால அடிப்படையில் மணல் திட்டுக்கள் அகற்றப்படும் ,மதகுகள் கட்டப்படும், அணைகள் சரிசெய்யப்படும், போன்ற பல்வேறு வாக்குறுதிகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிச் சென்றார். இதற்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது ,ஆனால் இன்னுமும் சரிவர தூர்வாரப்படாமல் வெண்ணாறு பகுதிகள் இருப்பதை நமது மாநாடு இதன்மூலம் செய்திகள் வெளியிட்டு சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
இருப்பினும் அந்த பகுதிகள் அந்த நிலையிலேயே தான் இருக்கின்றது. இந்நிலையில் இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது .இந்த ஆண்டு மட்டுமல்லாமல் எந்த ஆண்டாக இருந்தாலும் கூட ஆறுகளை சரி செய்யாமல் நீருகளைத் திறப்பதன் மூலம், விவசாயத்தை காத்தேன், விவசாயிகளின் தோழன் நான்தான் என்று வெற்று அறிக்கைகளை விடலாமே தவிர உண்மையில் விவசாயம் தழைக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை இதை உணர்வார்களா? ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பொருத்திருந்து பார்ப்போம்.