மாநாடு 25 May 2022
பேரறிவாளன் விடுதலையான நேரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சீமான் பதில் அளிக்கும் விதமாக ராஜீவ்காந்தி என்ன பெரிய தியாகியா, 400 கோடி ரூபாய் பீரங்கி ஊழல், போபர்ஸ் ஊழல் செய்தது ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்த மாபெரும் குற்றவாளி ராஜீவ்காந்தி என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் சட்டம் தனது கடமையை சரியாக செய்திருந்தால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நிருபர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உங்களை பாலியல் குற்றவாளி என்கிறாரே என்று கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த சீமான் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றது. அதற்கு காரணமாக இருந்தவர் அவங்க தலைவர் ராஜீவ் காந்தி எனவே பாலியல் குற்றவாளி ராஜீவ் காந்தி தான்.
நான் பாலியல் குற்றம் செய்தேன் என்பதை ஜோதிமணி பார்த்தாரா? உங்களை தங்கை என்பதைத் தவிர வேறு ஏதாவது பேசி இருக்கிறேனா, நான் எடுத்து வைக்கும் அரசியலுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அதை நேர் கொள்ளும் துணிவு இருக்கிறதா? அதைப்பற்றி பேசுங்கள் அதைவிடுத்து இதுபோன்று தனிமனித வன்மத்தை கக்குவது சரியல்ல பல பெண்களின் தாலி இறங்குவதற்கும், பல்லாயிரக்கணக்கான பெண்கள் கற்ப்பை இழக்க காரணமான பாலியல் குற்றவாளி ராஜீவ்காந்தி தான் என்றார்.
சீமானின் இந்த பேச்சு வைரலானது அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் சீமானை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீமானின் உருவ பொம்மையை எரித்தனர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதைப்பற்றி நாம் தமிழர் தம்பி கூறும்போது தற்போது தமிழகத்தில் அசாதாரண நிலை உருவாகி வருக்கிறது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறது ,அது மட்டும் அல்லாமல் பல மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்பு என்ற பெயர்களில் பூர்வ குடிமக்கள் வாழும் இடங்களை இடித்து அப்புறப்படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாலைகள் விரிவாக்கம் என்கிற பெயரில் மரங்களை வெட்டி விடுகின்றனர் ,இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றது, இதனையெல்லாம் துணிச்சலோடு சமரசமின்றி பேசும் தலைவன் தமிழ்நாட்டில் சீமான் மட்டும்தான் அதனை மடை மாற்றுவதற்காக இதுபோன்ற தேவையற்ற செயல்களில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?