மாநாடு 27 May 2022
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு பகுதியில் கடல் பாசியை சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை அங்கே இருந்த இறால் பண்ணையில் பணியிலிருந்த 6 வடமாநிலத்தவர்கள் கேலி கிண்டல் செய்ததாகவும், அதன்பிறகு அந்தப் பெண் அருகில் இருந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு உடலை எரித்து இருப்பதாகவும், தகவல் கிடைத்தது .
இதனையடுத்து காவலர்கள் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்கள். சந்தேகத்தின் பெயரில் வடமாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்களையும் காவலர்கள் விசாரித்து வந்தார்கள்
அதன்படி அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த பெண் சடலமாக இருந்த காட்டுப் பகுதியில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது, அதில் வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக காவல்துறை செய்திகள் தெரிவிக்கிறது. கொலையான பெண் தங்கச்சங்கிலியை போட்டு இருந்ததாகவும் நகையை அபகரிப்பதற்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, திருடப்பட்ட நகையை அருகிலிருந்த அடகுக் கடையில் அடகு வைக்கச் சென்றதாகவும் யாரும் வாங்காததால் அங்கே ஒரு குழியில் புதைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது, அருகிலுள்ள நகைக் கடைகளிலும் விசாரணைகள் நடந்து வருகிறது, முதல்கட்ட விசாரணையில் 2 பேர் குற்றவாளிகள் என்று தெரியவந்திருக்கிறது .மேலும் ராமேஸ்வரம் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரும் பிடிபடுவார்கள் என்று தெரிய வருகிறது.