மாநாடு 31 May 2022
முன்பெல்லாம் முதல்வர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து நாடகங்கள் நமது ஊர்களில் கிராமங்களில் நடத்துவார்களாம், சில முன்னாள் முதல்வர்கள் கூட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்,
அதைப்போல தற்காலங்களிலும் அவ்வபோது மக்கள் கண் முன்னே நாடகங்கள் நடந்து வருவதை காணமுடிகிறது, சென்ற ஆண்டு 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி கல்லணையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்திருந்தார் அப்போது வெண்ணாறு பகுதிகளிலும் மணல் திட்டுகளை அகற்றும் பணியையும் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துரிதமாக போர்க்கால அடிப்படையில் இந்த தூர்வாரும் பணிகள் நடைபெறும் அதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகள் முழுமையாக விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றார். இந்த பணிகளுக்காக மொத்தம் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது ,அதன்படி திருச்சி பகுதிக்கு 6 கோடி ரூபாயும் தஞ்சாவூர் வெண்ணாறு பகுதிகளுக்கு 20 கோடி ரூபாயும்
அதேபோல ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனித்தனியாக நிதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது .
1 ஆண்டு ஆகியும் வெண்ணாறு பகுதிகளிலுள்ள மணல் திட்டுக்களை முழுவதுமாக அகற்றவும் இல்லை தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவும் இல்லை என்பது அந்த வழியாக பயணம் செய்யும் அனைவருக்குமே தெரியும்.
பல இடங்களில் இன்று வரை மணல் திட்டுக்கள் அகற்றப்படவில்லை முறையாக பணிகள் நடைபெறவில்லை வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, இப்போது வரை அந்த நிலையிலேயே தான் இருக்கின்றது இருந்தபோதும் கடந்த 24 ஆம் தேதி திறந்துவிட்ட தண்ணீர் இன்று வெண்ணாறு பகுதியில் முழுமையான ஆறு இல்லாததால் முண்டியடித்துக்கொண்டு ஓடுகிறது.
இந்நிலையில் நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் பயணமாக டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு இருக்கும் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக வருகை புரிந்திருக்கிறார் அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சையிலும் இன்று திருவாரூர் மயிலாடுதுறை பகுதிகளிலும் பார்வையிட்டு வருகிறார்,
தூர் வாராமலிருக்கும் பகுதிகள் மணல் திட்டுக்களை அகற்றாமல் இருக்கும் பகுதிகள் என பல ஆறுகள் இன்னும் பழைய நிலையிலேயே இருக்கின்றது உண்மை அப்படி இருக்க சில லட்சங்கள் செலவு செய்து தூர்வாரப்பட்டு இருக்கும் கால்வாய்களையும் வாய்க்கால்களையும் பார்வையிட்டு வருவதாக தெரியவருகிறது. ஆறுகள் அடத்து இருந்தால் ,வாய்க்காலுக்கு எப்படி தண்ணிர் வரும் அது எப்படி வயலை வந்து சேரும். இந்நிலையிலும் சிறப்பாக தூர்வாரப்பட்டு இருப்பதாகவும் அதனை முதல்வர் பார்வையிட்டு கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. முதல்வர் ஸ்டாலினோடு அமைச்சர்கள் அதிகாரிகள், உள்ளிட்டவர்கள் இருக்கின்றார்கள். முறையாக தூர் வாரப் பட்டால் 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.