மாநாடு 2 June 2022
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் கடந்த 40 ஆண்டுகளாக விளை நிலங்களின் நடுவில் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் அமைத்து விவசாயத்திற்கு உலை வைத்திருக்கிறது எனவே இந்த நிறுவனத்தை எங்கள் மண்ணிலிருந்து அகற்ற ஒட்டுமொத்த விவசாயிகளையும், கிராம மக்களையும் ,பொதுமக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக தாய் நில பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் சோழன் மு.களஞ்சியம் அறிவித்திருக்கிறார்.
ஜூன் மாதம் 1ஆம் தேதி நேற்று அந்த விளைநிலங்களை பார்வையிட்டதுடன் இவ்வாறு தெரிவித்தார் அதன் விபரம் வருமாறு:
கடந்த 40 ஆண்டுகளாக கிராம மக்களிடம் கோவில் கட்ட பொருளுதவி செய்தும் அதேபோல சிறு சிறு உதவிகள் செய்து ஏழை எளிய மக்களை வஞ்சகமாக ஏமாற்றி நிலத்தின் வளங்களையும் கனிம வளங்களையும் ஓஎன்ஜிசி நிறுவனம் பாழ்படுத்தி வருவதை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புலவர்.கிருஷ்ணகுமார் தனக்குத் தெரியபடுத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டிருக்கும் அந்த கிணற்றை பார்வையிடுவதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒரு பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் சேகுவேரா மற்றும் மருது மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் செ. முத்துப்பாண்டி, நாம் தமிழர் கட்சியின் லஞ்ச ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமஅரவிந்தன் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிற்றதாகவும் கடந்த 40 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும்
அந்த கிணற்றை பார்த்தவுடன் தனக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டதாகவும், இதனால் தஞ்சை மண்டலமே பாலைவனமாக மாறும் அபாயம் இருக்கிறது என்றும்,இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும், விளைநிலங்கள் மலடாக்கப்படும், இந்த பேராபத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் .
ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டும். பசிக்கு பிள்ளைகளுக்கு பால் கொடுத்து கழுத்தை அறுப்பதற்கு சமமான வேலையை ஓஎன்ஜிசி நிறுவனம் செய்து வந்திருக்கிறது. இதன் பேராபத்தை குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை கொண்டு சேர்த்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை நிரந்தரமாக இம்மண்ணில் இருந்து வெளியேற்றும் மாபெரும் போராட்டத்தை தாய் நில பாதுகாப்பு பேரமைப்பு செய்ய இருக்கிறது தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பேரமைப்பின் தலைவர் மு. களஞ்சியம் தெரிவித்திருக்கிறார்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.