மாநாடு 2 May 2022
மகளிர் குழுவின் பெயரைச் சொல்லி போலி ஆவணங்களை தயாரித்து வங்கியின் கிளை மேலாளர் மகேஸ்வரி என்பவர் 97 லட்சம் மோசடி செய்திருக்கிறார் அவர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கையாடல் செய்த பணத்தை திரும்ப தருவதாகும் எழுதிக் கொடுத்து இருக்கிறார் ஆனாலும் தற்போது அவர் கைது செய்யப்பட்டு மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
வங்கி மேலாளர் கையாடல் செய்த பணத்தை திரும்ப கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னபோதும் கைது நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையும் அரசும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும் அரசுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் இடிக்க உத்தரவு வந்தவுடன் சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகம் இந்த இடத்திற்கு பதிலாக புதுக்கோட்டையில் உள்ள தனது நிலத்தை தருகிறேன் என்று அரசுக்கு சொல்லியிருப்பதாகவும் அதனை அரசு ஏற்று இருப்பதாகவும் தெரியவருகிறது இந்த செய்தியின் முழு விவரம் நமது மாநாடு இதழில் வெளியிடப்படும்.
சரி இப்போது மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் மோசடி செய்த மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் மகேஸ்வரி அகப்பட்டது எப்படி என்று பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இயங்கி வரும் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக் குழு பெயரில் மோசடி நடந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. புகாரினை தொடர்ந்து கூட்டுறவு சங்க தணிக்கை துறை அதிகாரிகள் வங்கியில் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதில் கடந்த 2018,19ம் நிதி ஆண்டு காலகட்டத்தில் மகளிர் சுய உதவி குழு பெயரில் போலி பயனாளிகள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி ரூ.97 லட்சம் ரூபாய் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் செய்தார். அதனடிப்படையில் ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் உமா மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
அதன்படி கடந்த ஆண்டு உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட வங்கிக் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கையாடல் செய்த பணத்தை திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கொடுத்த போதும் வங்கி மேலாளரை கைது செய்த காவல்துறையினர் இதே நடவடிக்கையை தஞ்சை சாஸ்திரா பல்கலை கழகத்திலும் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அரசும் அரசு நிர்வாகமும் செய்யுமா விரைவில் விடை கிடைக்கும்.