மாநாடு 18 June 2023
ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டை அதன் பொருளாதாரத்தை, பண்பாட்டை காக்கத் துடித்த இளைஞர்கள் .சில நாட்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, மறியல் செய்வது ,ரயில்களை எரிப்பது போன்ற செயல்களில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக வடமாநிலங்களில் பிகார் ,உத்தரப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக தென்மாநிலங்களில் தெலுங்கானாவை தொடர்ந்து இன்று காலை தமிழ்நாட்டிலும் போராட்டம் பற்ற தொடங்கியிருக்கிறது.
போராட்டத்தின் காரணமாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுவது: சில நாட்கள் முன்பு மத்திய அரசு அமைச்சரவையில் அக்னிபத் என்கிற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அந்தத் திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் அதன்பிறகு 75 விழுக்காடு இளைஞர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். மீதமுள்ள 25 விழுக்காடு இளைஞர்கள் மட்டும் வேலையில் இருப்பார்கள் என்கிறதாம் அக்னிபத்.
இதனால் ஏற்கனவே பல ஆண்டுகள் ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற ஆவலில் உடற் தகுதியையும், எழுத்து பயிற்சிக்கான தகுதியையும் பெருவதற்காக எங்களது நேரத்தை செலவு செய்து அதற்கான தகுதியோடு ராணுவத்தில் விண்ணப்பித்து காத்திருக்கிறோம். இதுபோன்ற நேரத்தில் ராணுவத்தில் சேர்பவர்கள் 4 ஆண்டு பணி செய்துவிட்டு வெளியேற்றப்படும் அக்னிபாத் என்கிற திட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்துவது ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விடும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மாணவர்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை தலைமைச் செயலகம் அருகில் பல மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து குவிய தொடங்கினார்கள். இவர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டிருந்தார்கள் .
இந்த மாணவர்கள் கூறும்போது நாங்கள் ராணுவத்தில் சேருவதற்கான உடற்தகுதி தேர்வில் 2020ம் ஆண்டு வெற்றி பெற்று விட்டு எழுத்து எழுதுவதற்காக காத்திருந்தோம், இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று வந்த காரணத்தினால் எழுத்துத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று காத்திருந்த எங்களுக்கு அக்னிபத் என்கிற முறையில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு 4 ஆண்டுக்கு பிறகு வேலையில் இருந்து விடுவிக்கப் படுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியில் வந்து வேறு வேலைகளுக்கு தயார் நிலையில் இருக்கும் இளைஞர்களோடு எங்களால் போட்டியிடுவது மிகவும் கடினம். எனவே மத்திய அரசு உடனடியாக அக்னிபத் என்கிற திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் போராடுகிறோம் என்கிறார்கள் மாணவர்கள்.
அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்களுக்கு 10% விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில் அசாம் ரைபிள் படையிலும் ,துணை ராணுவப் படையிலும், பணியில் சேரலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதாக செய்திகள் வருகிறது.