மாநாடு 18 June 2022
இந்திய இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஜூன் 18,19,20 ஆகிய மூன்று தினங்கள் தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது.
அதன்படி இன்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்தத் திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை சிதைத்துவிடும் எனவே இத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். நடைபெற்ற போராட்டத்திற்கு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தஞ்சை மாநகர செயலாளர் யூ.காதர் உசைன் தலைமை தாங்கினார்.
மாநகர தலைவர் சே.ஹரிபிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஆம்பல் துரை ஏசுராஜா போராட்டத்தை விளக்கி கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில்
அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் உ.சரவணன்
ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் செ.பெர்னாட்ஷா மற்றும் மாநகர் நிர்வாகிகள்
அருண் குமார்
பெரியசாமி
ராமசந்திரன்
நாகராஜ்
முகமது ரோகித்
சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.