Spread the love

மாநாடு 25 June 2022

சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வாணி கபிலன் என்பவர் சென்றுகொண்டிருந்த மகிழுந்து மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே வாணி கபிலன் உடல் நசுங்கி உயிரிழந்தார் ஓட்டுநரும் வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த இவரின் தங்கையும் படுகாயமடைந்தார்கள் இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இல்லாததே பொது மக்களாக சாலையில் பயணித்த வங்கி மேலாளர் உயிரிழக்க காரணம் என்று பலரும் கூறி வந்தனர். அதனை மறுக்கும் விதமாக சென்னை மேயர் பிரியா இந்த விபத்துக்கும் சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறார்.

விபரம் பின்வருமாறு: சென்னை போரூர் மங்கலம் நகரை சேர்ந்தவர் வாணி கபிலன் . இவர் கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.நேற்று மாலை பணி முடிந்து தனது மகிழுந்தில் பின்புறத்தில் அமர்ந்துகொண்டு தனது தங்கை எழிலரசியுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்திருக்கிறார். இவரின் வாகனம் கே.கே நகர் லட்சுமண சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக கர்நாடக வங்கி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து இவர் வந்த மகிழுந்தின் மீது விழுந்திருக்கிறது.

இதில் காரின் பின் பக்கம் அமர்ந்திருந்த வாணி கபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து இருக்கிறார். இவரது தங்கை எழிலரசி மற்றும் ஓட்டுனர் கார்த்திக் காயமடைந்திருக்கிறார்கள். தகவலறிந்து அசோக்நகர் தீயணைப்பு துறையினர், மீட்புப்படையினர் வந்து மரத்தை அகற்றியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.கே நகர் காவல் நிலைய காவலர்கள் வாணி கபிலனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த பகுதியில் மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் மரத்தின் வேர் பலமிழந்திருக்கிறது என்றும் இதன் காரணமாக வாணி கபிலன் பயணித்த கார் மீது விழுந்திருக்கிறது என்றும் கூறப்பட்டது. சிலரின் அலட்சியப் போக்கால் வாணி கபிலன் இறந்து இருப்பதாக கூறி பலரும் சமூக ஊடகங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இந்த விபத்திற்கு யார் காரணம் என்ற விசாரணையில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விபத்துக்கு, மழைநீர் வடிகால் பணிகள் காரணமில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. விபத்து நேரிட்ட இடத்துக்கு 10 அடிக்கு முன்னதாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாகப் பெய்த மழையாலும், மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் ,பழமையான அந்த மரம் சாய்ந்துள்ளதாக மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. அங்கு இரண்டு நாள்களாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இதைப்பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது இவ்வாறான பணிகள் நடைபெறும் பகுதிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும், அந்த சாலையில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து மாற்று சாலையில் பயணிக்க வைத்திருக்க வேண்டும், ஒருவேளை இவர்கள் கூறுவது போல பழைய வலுவிழந்த மரம் என்றால் அதனை அகற்றி இருக்க வேண்டும், இவ்வாறான முன்னெச்சரிக்கையாக எதுவும் செய்யாமல்,வங்கி மேலாளர் வாணி கபிலன் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த பின் பொறுப்பற்ற முறையில் இவ்வாறாக சென்னை மாநகராட்சி கூறுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல ,இவர்கள் கூடுதலாக ஒன்றை சொல்ல மறந்து விட்டார்கள் போலும் என்னவெனில் இறந்த வாணி கபிலனுக்கு விதி முடிந்துவிட்டது இறந்துவிட்டார் என்று மட்டும் தான் இவர்கள் கூறவில்லை என்கிறார்கள் ஆதங்கத்தில் சமூக ஆர்வலர்கள்.

40350cookie-checkஇதனால்தான் இறந்தாரா வங்கி மேலாளர் ஆதங்கப்பட்ட சமூக ஆர்வலர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!