மாநாடு 28 June 2022
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 26 ஆம் தேதி புதுக்கோட்டைக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையிலும் அறந்தாங்கியிலும் நடைபெற்ற திமுகவினரின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது திருமண விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்
அதிமுகவையும் பாஜகவையும் போல ஒருவருக்கொருவர் அடிமையாக இருந்து விடாமல் திராவிட மாடல் ஆட்சியைப் போல உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் ஒருவர்க்கொருவர் வாழவேண்டுமென்று மணமக்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
அதன் பிறகு ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேப்பறையில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 99 அடி உயர கொடி கம்பம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஏற்பாட்டில் தயார் செய்யப்பட்டிருந்தது,அந்த கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இந்த பகுதியில் உதயநிதியை வரவேற்கும் விதமாக வருங்கால அமைச்சர், வருங்கால தமிழக முதல்வர், இந்தியாவில் தன்னிகரில்லா தலைவர் போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அதன்பிறகு தஞ்சைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் காலில் தஞ்சாவூர் மாநகர மேயர் சன். ராமநாதன் விழுந்தார் அது ஊடகங்களில் வந்து பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.
இதைப்பற்றி அரசியல் நோக்கர்கள் கூறும்போது
தகுதி இல்லாதவர்கள் கையில் பதவி வந்தால் இப்படிதான் மக்கள் அனைவரையும் ஒருவரின் காலில் போட்டு மிதிக்கும் படியான இழி செயல்களை செய்வார்கள் என்கின்றனர். அதாவது மேயர் பதவி என்பது சாதாரணமாக காலில் விழுந்து, ஒரு குடும்பத்துக்கு பணிவிடைகள் செய்து, கூல கும்பிடு போட்டு பெரும் கட்சி பதவி அல்ல, மேயர் என்கிற மாநகர தந்தை பொறுப்பில் இருப்பவர் தன் கட்சிக்கு மட்டுமானவர் அல்ல, அவர் சார்ந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்குமானவர் இவ்வாறான பெரும் பொறுப்பில் உள்ளவர் தலைநிமிரும்படி எது செய்தாலும் அந்த மாநகர மக்களையே சேரும் அதேபோல மேயர் இழிவான செயல்கள் எது செய்தாலும் அதுவும் அந்த மாநகர மக்களையே சேரும் நிலை இப்படி இருக்க உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சை வந்திருந்தபோது தஞ்சாவூர் மாநகர மேயர் சன்.ராமநாதன் உதயநிதி காலில் அதுவும் மேயர் உடையுடன் விழுந்தது தஞ்சை மாநகர மக்களையே தலைகுனிய வைத்த செயலாகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இங்கு வருவதற்கு முன்பு புதுக்கோட்டையில் பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக-பாஜக போல அடிமையாக இருந்து விடாமல்
திராவிட மாடல் ஆட்சியை போல உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழவேண்டுமென்று மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிட மாடல் ஆட்சியாளர்களின் சுயமரியாதை இதுதானா?