Spread the love

மாநாடு 28 June 2022

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் உள்ள பஞ்சு விவசாயிகள் தங்கள் வெள்ளாமை செய்த பஞ்சிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று பல இடங்களிலும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பஞ்சி விவசாயிகள் ஏறக்குறைய 1000 பேர் தங்கள் விளைவித்த பஞ்சுக்கு உரிய நியாயமான விலை கிடைக்கவில்லை என்றும் அரசே ஒரு விலையை தீர்மானிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது மாவட்ட துணை ஆட்சியர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை இருப்பினும் இன்று இரவு 8 மணி வாக்கில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றிருக்கிறார்கள். மீண்டும் நாங்கள் கலந்து பேசி அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று முடிவெடுப்போம் என்கிறார் நம்மிடம் பேசிய விவசாயி சுகுமார்:

மேலும் அவர் கூறுகையில் சென்ற வாரம் பருத்தி 1 கிலோ 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விலை போனது அப்போது வியாபாரிகள் 20 நபர்கள் வந்திருந்தார்கள். ஆனால் இந்த வாரம் ஒரு கிலோ 45 ரூபாயிலிருந்து 89 ரூபாய் வரை தான் கேட்கிறார்கள் இந்த விலையில் நாங்கள் விற்பனை செய்தால் கடன் வாங்கி வெள்ளாமை செய்த பணம் கூட எடுக்க முடியாது அந்த நிலை ஏற்பட்டால் நாங்கள் விபரீத முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை இதற்கெல்லாம் காரணம் அரசு ஒரு நிர்ணய விலையை நினைக்காதது தான் என்றார் மன வேதனையோடு மேலும் விவசாயிகளாகிய எங்கள் வயிற்றில் அடிப்பதையே ஆளுங்கட்சிகள் வாடிக்கையாக வைத்து நாங்கள் படும் பாட்டை வேடிக்கை பார்க்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் உரத்தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது இதைக் காரணம் காட்டி 1 மூட்டை யூரியா வேண்டுமென்றால் அதற்கு 300 ரூபாய் மதிப்புள்ள களைக்கொல்லி போன்ற மருந்துகள் கட்டாயமாக வாங்க வேண்டும் அப்போது தான் யூரியா தருவோம் என்று கட்டாயப்படுத்தி வாங்க வைக்கிறார்கள். இது போன்ற அராஜக போக்கை கண்டிக்க வேண்டிய அரசுகள் கண்டுகொள்ளாமல் வேறு வேலைகளில் ஈடுபடுவதும் அடிக்கல் நடுவதுமாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது என்கிறார்கள் விவசாயிகள்.

விளக்கமாக கூற வேண்டுமெனில் திருப்பனந்தாள் ,வலங்கைமான், கொட்டையூர், பாபநாசம் உள்ளிட்ட அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பஞ்சு மூட்டைகளை வைத்திருப்பார்கள் .இது ஒவ்வொரு வாரமும் ஏலம் விடப்படும் இந்த ஏலத்தில் ஈடுபடுவதற்காக ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து தனியார் வியாபாரிகள் வருவார்கள் அரசின் சார்பில் ஒரு வியாபாரி வருவார் அதன்படி சென்ற வாரம் 20 தனியார் வியாபாரிகள் வந்திருந்தார்கள் அப்போது ஒரு கிலோ 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை சென்றது அதன்படி 100 கிலோ அதாவது ஒரு குவின்டால் பஞ்சு 12,000 ரூபாய்க்கு விற்பனையானது ஆனால் இந்த வாரம் தனியார் வியாபாரிகள் 4 பேர் மட்டுமே வந்திருந்தார்கள் அதன் காரணமாக 45 ரூபாயிலிருந்து 89 ரூபாய் வரை தான் ஏலம் போனது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகவில்லை ,இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராட்டத்தில் குதித்துள்ளார்கள். தனியார் வியாபாரிகள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் எங்களது பஞ்சுக்கு நல்ல விலை கொடுத்தார்கள் அவர்களையும் இங்கு உள்ள தனியார் வியாபாரிகள் இங்கு கொள்முதலுக்கு வரக்கடாது என்று தடை விதித்து விட்டு இன்று மிகவும் குறைந்த விலைக்கு நாங்கள் வெள்ளாமை செய்த பஞ்சுகளை கேட்கிறார்கள் இது எந்த வகையிலும் நியாயமற்ற செயலாகும் எனவே இந்தப் பிரச்சனையில் அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

அந்தந்த மண்ணின் சொந்தத் தொழிலை செய்தால் மட்டுமே அந்த மண்ணில் வாழ்பவர்களும், அந்த மண்ணும் வளமாக இருக்கும். இதனை சரி செய்யாமல் எத்தனை நாட்டிற்கு சென்று எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்து இந்த மண்ணில் இறக்கினாலும் மண்ணும், மக்களும் ,வளமிழந்து கை ஏந்துவார்கள் என்பதே வரலாறு நமக்குப் புகட்டும் பாடம்.

ஆளும் கட்சிகள் வெற்று விளம்பரத்தை விட வேண்டும்  நாளும் உழைக்கும் நம் விவசாயிகளை காக்க வேண்டும்.

செய்தி:இராசராசன்

40670cookie-checkபஞ்சு விவசாயிகள் வயிறை எரிய வைக்கும் ஆளுங்கட்சி தஞ்சையில் போராட்டம் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!