மாநாடு 30 June 2022
ஒரு பக்கம் ஆளுங்கட்சியின் சாதனைகளை விளக்கி கூட்டம் போடப்படுகிறது .மறுபக்கம் குடிக்க தண்ணீர் இல்லை பொறுத்துக் கொண்டோம் ஆனால் எங்கள் ஊரில் இறந்த பிணத்தை குளிப்பாட்டக் கூட தண்ணீர் இல்லை 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெட்டாறு சென்று 150 குடம் தண்ணீர் எடுத்து வந்து அந்த சடலத்தை குளிப்பாட்டி சடங்குகள் செய்தோம் அதனால் சுடுகாட்டிற்கு செல்ல வெகு நேரம் ஆகிவிட்டது இரவு தான் அடக்கம் செய்தோம்,
எங்கள் பொறுமைக்கும் ஒரு அளவு உள்ளது. இனியும் நாங்கள் பொறுத்துக் கொள்ள தயாராக இல்லை என்று தஞ்சாவூர் மாவட்டம்,
பாபநாசம் – சாலியமங்கலம் சாலையில் உள்ள சுரைக்காயூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். கிராம மக்கள் கூறியதாவது: நாங்கள் இதுவரை முறையிடப்படாத அதிகாரிகள் இல்லை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், உட்பட அனைவருக்கும் எங்களின் நிலையை தெரியப்படுத்தி இருக்கிறோம் ஆனால் இதுவரை எந்தவித தீர்வும் எங்களுக்கு கிடைக்கவில்லை, அரசுகள் கொண்டுவரும் சலுகையை கூட இங்கு இருக்கும் கட்சிக்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு எங்களுக்கு வராமல் தடுக்கிறார்கள், மேலும் மேல்நிலை நீர் சேர்க்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் கிடக்கிறது அது மட்டுமல்லாமல் பொதுக்கழிப்பிடமும், மக்கும் குப்பை மக்காத குப்பைக்காக வாங்கிய வாகனங்களும் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.
உயர் அழுத்த மின்சார கம்பி தாழ்வாக தொடும் நிலையில் இருக்கிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் அதன் பிறகும் அப்படியே தான் இருக்கிறது .இப்படி பல்வேறு குறைகள் மட்டுமே நிரம்பி இருக்கிறது எங்கள் ஊர்.
ஆனாலும் எங்கள் ஊருக்கு ஊராட்சி மன்ற தலைவர் இருக்கிறார், கிளர்க் இருக்கிறார், பிடிஓ இருக்கிறார், ஓட்டு கேட்பதற்காக அரசியல் கட்சிகளும், அதன் நிர்வாகிகளும் கூட எங்கள் ஊரில் இருக்கிறார்கள் ஆனாலும் எங்கள் சுரைக்காயூர் மக்களுக்கு வாழும் போதும் குடிக்க தண்ணீர் இல்லை ,செத்த போதும் பிணத்தை குளிப்பாட்டக் கூட தண்ணீர் இல்லை என்கிற விரக்தியில் தான் போராட்டத்தில் இறங்கினோம்,
மாவட்ட ஆட்சியர் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் மனு கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள் கிராம மக்கள்.
வீடியோ லிங்க் இதோ:https://youtu.be/_OYgEJk_Rr4