மாநாடு 11 July 2022
கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது அப்போது 23 தீர்மானங்களும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களின் முதன்மையான கோரிக்கை ஒற்றைத் தலைமை தான் எனவே வருகிற ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி ஒற்றை தலைமையை முடிவு செய்யும், அப்போது இந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அப்போது அங்கிருந்து ஓபிஎஸ் ஆதரவாளரும் துணை துணை ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து வெளிநடப்பு செய்தார்.அவரோடு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் இந்த பொதுக்குழு சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுவதாக கூறி பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார்கள்.
அதன் பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த அனுமதி தரக்கூடாது என்று பல்வேறு வழக்குகளை தொடுத்தார்கள், பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள. இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் தொடங்கி இருந்த வழக்கும் இன்று சற்றுமுன் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டிருக்கிறார்.
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் இன்று காலையிலேயே கூடிய ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பெரும் மோதலில் ஈடுபட்டு சாலைகளில் இருந்த வாகனங்களை அடித்து உடைத்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டு இருந்தார்கள், பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது ,அப்போது போதுமான காவலர்களும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது, மேலும் அதிமுக தலைமை அலுவலக கதவும் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டது,
ஓ.பி.எஸ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களும் அதிமுக தலைமை அலுவலகம் உள்ளே சென்றார்கள். தலைமை அலுவலக பால்கனிக்கு வந்த ஓபிஎஸ் அதிமுக கொடியை கையில் ஏந்தி நின்றார்.
இதே நேரத்தில் இ.பி.எஸ். ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் பொதுக்குழு அரங்கத்தில் இருந்தார். அப்போது உயர் நீதிமன்றத்தில் வந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை கூட்டலாம் என்று உத்தரவு வந்திருப்பது. இபிஎஸ் தரப்புக்கு பெரும் வெற்றியாகவே அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இரட்டை தலைமை பதவிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது, இன்னும் நான்கு மாதங்களில் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.