Spread the love

மாநாடு 11 July 2022

கோவை வடவள்ளி பகுதியில் எல்.எஸ். கன்ஸ்டிரக்ஷன் அஃபோர்டு டூரிஸ்ட் அன்டு டிராவல்ஸ் என்ற நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் 50க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது : செய்திதாள்களில் அந்நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து அந்நிறுவனத்தில் தொடர்பு கொண்டதாகவும் சிங்கப்பூரில் பல்வேறு இன்ஜினியரிங் வேலை, வாகன ஓட்டுநர், அட்மின் வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் அங்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் பதிவு செய்யும் வேலைக்கேற்ப ஒரு லட்சம் முதல் பல லட்சங்கள் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், விமான பயண சீட்டுகளையும் வழங்கிவிட்டு, கடந்த 8ம் தேதி வாகனம் வந்து உங்களை அழைத்து கொண்டு சென்னை சென்று கொரோனா பரிசோதனைகள் எல்லாம் செய்துவிட்ட பின் சிங்கப்பூர் அழைத்து செல்வோம் எனக் கூறியதாகவும் ஆனால் 8ம் தேதி மதியம் வரை வாகனம் எதுவும் தங்களை அழைக்க வரவில்லை என்றும் அந்நிறுவனத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்ட பொழுதும் தொடர்பு கிடைக்காமல் இருந்தாதகவும், சிலர் நேரடியாக அங்கு சென்று பார்க்கும் போது அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததாகவும் பின்பு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாக தெரிவித்தனர்.

மேலும் அந்நிறுவனம் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து 3 கோடி ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்ததாகவும் இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

42810cookie-checkவெளிநாட்டில் வேலை ஏமாந்த மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!