மாநாடு 12 July 2022
இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனைகள் ஈடுபட்டிருந்த வைத்தியலிங்கம் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
பொதுச் செயலாளர் பதவி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது .இந்த பதவிகளின் காலம் 5 ஆண்டுகள் இதை பொதுக்குழுவால் நீக்க முடியாது, எனவே தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் அண்ணன் ஓபிஎஸ் தான் இருக்கிறார், இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலமாக தெரிவித்து இருக்கிறோம்.
தன்னை முதலமைச்சர் ஆக்கிய சின்னம்மாவுக்கும் துரோகம் செய்தார் இபிஎஸ். நான்காண்டுகள் தனக்கு உறுதுணையாக இருந்த அண்ணன் ஓபிஎஸ் க்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துவிட்டார் என்றார் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்.