Spread the love

மாநாடு 14 July 2022

தற்போது தஞ்சை மாநகராட்சியின் மேயராக இருக்கும் சண்.ராமநாதனின் பிறந்தநாள் இன்று இவரது ஆதரவாளர்களும் திமுகவின் உடன்பிறப்புகளும் தஞ்சை நகர் முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது அன்பையும் ஆதரவையும் சண்.  ராமநாதனுக்கு வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.

சண்.ராமநாதன் 2006, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக இருந்தவர், அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற மாநகராட்சி தேர்தலிலும் 45 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கடும் போட்டி இருந்த நிலையில் இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நெருங்கிய தொடர்பில் இருந்ததால் பல தடைகளையும் மீறி மேயர் பதவி சண்.ராமநாதனை வந்து சேர்ந்தது,

இவரைப் பற்றி திமுகவினர் சிலர் கூறியதாவது: தற்போதைய மேயர் சண்.ராமநாதன் எந்தவித குழு அரசியலிலும் சிக்காதவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருந்து வருகிறார் இவர் இளைஞரணி செயலாளர் பதவியிலும் இருந்தார், தலைவர் குடும்பத்துடன் நேரடி தொடர்பில் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களால் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருக்கமானவர் ,ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார், மேயர் பதவியே அவர்களின் நெருக்கத்தால் தான் இவருக்கு கிடைத்தது, அதேசமயம் தஞ்சாவூர் திமுகவில் சமீப காலத்தில் யாருக்கும் இந்த அளவு பிறந்தநாள் விழா போஸ்டர்கள் அடித்து அமர்க்களமாக கொண்டாடியதில்லை இன்று இவர் பிறந்த நாள் விழாவிற்கு தொண்டர்களால் அடிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட போஸ்டர்களை பார்க்கும் போது எங்களைப் போன்ற திமுகவின் தொண்டர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது,

திமுகவின் தொண்டர்களிடத்தில் இவ்வளவு செல்வாக்கோடு அனைவரும் கொண்டாடும் அளவிற்கு சண். ராமநாதன் இருப்பதால் அடுத்து அவருக்கு சட்டமன்ற வேட்பாளராகவோ அல்லது அதற்கு மேல் நாடாளுமன்ற வேட்பாளராகவோ திமுகவின் தலைமையால் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது எந்த குழு அரசியலிலும் சிக்காத தற்போதைய மேயர் சண். ராமநாதனுக்கு திமுகவில் ஒரு குழு இருப்பதே எங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது,

சண். ராமநாதன் தஞ்சாவூர் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே என்றார் அந்த உடன்பிறப்பு.

வீடியோ லிங்க் :https://youtu.be/nv9dEYpRNl4

43280cookie-checkதஞ்சை திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் சண்.ராமநாதன் பிறந்தநாளில் வெளிக்காட்டிய ஆதரவாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!