மாநாடு 3 October 2022
தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் சூழலில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து செயல்பட்டு மக்களிடம் நற்மதிப்பை பெற்று வளர வேண்டிய அதிமுக பல்வேறு அணிகளாக பிளவு பட்டு கிடப்பது நல்லதல்ல என்று கருதுகிறார்கள், அதிமுகவில் பிளவு பட்டு கிடக்கின்ற அணியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள்.
இதனிடையே அதிமுக ஒன்றிணையாமல் இருப்பதற்கு காரணமே இவர்கள்தான் என்று நேற்று நாமக்கல்லில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆதங்கத்தோடு பேசி இருக்கிறார்.
அதில் ஓபிஎஸ்க்கு எந்தவித மரியாதை குறைவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இணைப்பொது செயலாளர் பதவியும், அவரது மகனுக்கு அமைச்சர் பதவியும் ,கொடுப்பதாக உறுதியளித்தோம், ஆனால் இதை ஏற்க மறுத்து விட்டார். ஓபிஎஸ்யோடு நாங்கள் தனியாக பேச முடியவில்லை, எப்போதுமே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும், ஜே.சி.டி.பிரபாகரனும், மனோஜ் பாண்டியனும் கூடவே இருந்தார்கள் ,இதில் வைத்தியலிங்கம் அதிமுக ஒன்றிணைய கூடாது என்று நினைக்கிறார். அவர்கள் திட்டமும் நிறைவேறியது, கடைசி கட்ட பேச்சுவார்த்தையின் போது நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் தாக்க முற்பட்டார். அதிமுக இணைய கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுபவர்கள் கூட பேசி எவ்வித பயனும் இல்லை என்ற காரணத்தால் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு வந்து விட்டோம் என்று தனது ஆதங்கத்தை கூடியிருந்த தொண்டர்களிடத்தில் வெளிப்படுத்தினார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.
ஓபிஎஸ் தரப்பு அணி என்று பெயரில் இருந்தாலும், இபிஎஸ் தரப்பு அணியினருக்கு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் மீதுதான் கோபம் இருப்பதாக அவர்களது பேச்சிலிருந்து தெரிகிறது .
அதிக அளவில் தொண்டர்களை வைத்திருக்கின்ற அதிமுக ஒன்றிணைந்து மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. விரைவில் ஒன்றிணைவார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.