Spread the love

மாநாடு 14 October 2024

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி 07.10.24 அன்று ஆணையை வெளியிட்டு இருக்கிறது, பல்கலைக்கழக நிர்வாகம். திருச்சி, தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பெரும்பாலும் ஏழை எளிய விவசாய மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகளே கல்வி பயின்று வருகின்றனர். பெறும் பொருளாதார நெருக்கடிகள் நிலையில் இருக்கும் நிலையில் தேர்வு கட்டணத்தை உயர்த்திருப்பது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

இக்கல்வியாண்டில் தொடக்கத்திலிருந்தே பருவத் தேர்வுக்கான இளநிலை பாடப்பிரிவில் ஒரு பாடத்தின் எழுத்து தேர்வுக்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 150 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. இளநிலை செய்முறை தேர்வுகளுக்கான கட்டணம் மூன்று மணி நேரத்திற்கு 100 ரூபாயிலிருந்து 140 ரூபாயும் ஆறு மணி நேரத்திற்கு 200 ரூபாயிலிருந்து 280 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்காலிகச் சான்றிதழ் காண கட்டணம் 200 ரூபாயிலிருந்து 350 ரூபாயும் மொத்த மதிப்பெண் சான்றிதழுக்கான கட்டணம் 200 ரூபாய் இருந்து 600 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஏழை எளிய மாணவர்களுக்கும் உயர் கல்வி எவ்வித தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் இப்போது அதற்கு மாறாக மாணவர்களிடமிருந்து எந்தெந்த வகையில் பணம் வசூலிக்கலாம் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மாணவர்களின் பருவ தேர்வு கட்டணத்தை இந்த ஆண்டு உயர்த்திய நிலையில் அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்த தவறினால் அபராத தொகை என்ற பெயரில் நான்கு மடங்கு தொகையுடன் மற்றும் GSTயையும் இணைத்து மாணவரிடம் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிர்வாகம் அதிக பணம் வசூலிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது
மாணவர்களின் நலன் கருதி உயர்த்தப்பட்டுள்ள தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சூரியா தலைமையில் இன்று திருச்சி மாநகர் காட்டூர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய உருமூ தனலட்சுமி கல்லூரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களிடம் இருந்து நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி செய்யும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை கண்டித்து முழக்கத்தை மாணவர்கள் எழுப்பினர் உடனடியாக உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர் இந்த போராட்டத்தில் UDC கல்லூரியின் கிளை தலைவர் ஸ்ரீநாத் UDC கல்லூரியின் கிளைச் செயலாளர் ஹரி மற்றும் 100 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

74820cookie-checkதிருச்சியிலும் மாணவர்கள் போராட்டம் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெறு

Leave a Reply

error: Content is protected !!