Spread the love

மாநாடு 16 May 2025

எத்தனை பேரை கைது செய்தாலும், கவர்மெண்ட் அலுவலகத்தில் அதிகாரிகள் முதல் அடிப்படை அலுவலர்கள் வரை கைநீட்டி லஞ்சம் வாங்குவதை சமீப காலமாக கௌரவமாகவே கருதுகிறார்கள் என்பதை பல்வேறு துறையினரின் கைது கண்முன்னே காட்டுகிறது அதிலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பக்காவாக லஞ்சம் விளையாடும் என்பதும், தாசில்தார் அலுவலகத்தில் தாராளமாக லஞ்சம் நிறைந்து ஓடும் என்பதும் அங்கு செல்லும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே அதே போல கடலூர் மாவட்டத்தில் விஏஓ வாங்கும் சம்பளம் பத்தாது என்று லஞ்சத்துக்கு கைநீட்டி கைதாகி இருக்கிறார் என்ன நடந்தது என்பதை பார்ப்போம் ;
கடலூர் மாவட்டம் தொரவலூர் கிராமம் அருகே ஆலமரம் தெருவை சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம் பழமலை என்பவருக்கு சொந்தமான தொரவலூர் கிராமத்தில் உள்ள நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார் .

வேலாயுதத்தின் நிலத்தை அளந்து காட்ட ஏற்பாடு செய்வதற்கு தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் R.தனசேகர் வேலாயுதத்திடம் நேற்று 15.05.2025 ஆம் தேதி 10,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். வேலாயுதம் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இன்று கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் மேற்படி தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் செய்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கு.எண்.4/2025 பிரிவு, 7 of The Prevention of Corruption (Amendment) Act, 2018, படி வழக்கு பதிவு செய்தனர் . அவர்களின் வழிகாட்டுதலின்படி

இவ்வழக்கில் இன்று வேலாயுதம் விஏஓ கேட்ட 10,000 ரூபாய் லஞ்சப்பணத்தை தொரவலூர் விஏஓவிடம் கொடுக்கும் போது கைநீட்டி வாங்கிய விஏஓ தனசேகரை அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் K.சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

80420cookie-checkலஞ்சம் கைநீட்டிய வீஏஓ கைது பரப்பரப்பு
One thought on “லஞ்சம் கைநீட்டிய வீஏஓ கைது பரப்பரப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!