மாநாடு 23 August 2025
இன்று அரசு அலுவலர்களின் அலட்சியத்தாலும், அப்பாவி தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உயிர் பறிபோகி இருக்கிறது, குழந்தைகள் தாயை இழந்து பரிதவித்து நிற்கிறார்கள், மயிர் சரியாக வெட்டவில்லை என்றாலே சேவை குறைபாடு மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்றுத் தர முடியும் என்கிறது சட்டம் அப்படி இருக்க சென்னை சோளிங்கநல்லூர் பகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் இன்று பணிக்கு செல்லும்போது வழியில் தேங்கி நின்ற மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அவரின் மரணத்திற்கு தமிழக அரசு இழப்பீடாக 20 லட்ச ரூபாய் அறிவித்திருக்கிறது. மயிருக்கே கோர்ட்டுக்கு போகலாம் , நீதி பெறலாம் , தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் என்கிற நிலை இருக்கும் போது கேட்பாரற்ற நிலையில் ஒப்பந்த ஊழியராக தூய்மை பணியாளர் பணியை செய்து கொண்டிருந்த அப்பாவி தொழிலாளி மரணத்திற்கு காரணமான அலட்சியமாக இருந்த அலுவலர்களுக்கு சட்டப்படி நேர் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே நீதியாகும் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது. இந்நிலையில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி என்ற ஒப்பந்த தூய்மை பணியாளர், வழக்கம் போல திருவான்மியூருக்கு தூய்மை பணிக்காக சென்றுக் கொண்டிருந்தவர். கண்ணகி நகர் 11வது குறுக்குத் தெருவில் மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே வரலட்சுமி உயிரிழந்துள்ளார். சேதம் அடைந்த மின்கம்பியை சரி செய்யக் கோரி பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே வரலட்சுமி உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.