மாநாடு 2 September 2025
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்களுடனான நல்லுறவில் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது என்று பத்திரிக்கை செய்தியில் வெளியிட்டு இருப்பதாவது :
இன்று 02.09.2025 தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் கும்பகோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மேற்கு காவல் நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தஞ்சை சரக காவல்துறைத் துணைத்தலைவர் திரு,ஜியாவுல் ஹக் இ.கா.ப அவர்கள், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜாராம் த.கா.ப., அவர்கள் மற்றும் கும்பகோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.அங்கிட் சிங் இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர். காவல் நிலையங்களை நாடி வரும் பொதுமக்கள் அச்சமின்றி காவலர்களுடன் நல்லுறவை பேணும் வகையிலும்,
காவல் நிலையம் என்றாலே குற்றவாளிகள் வந்து போகும் இடம் என்ற நிலையை மாற்றும் வகையில் மாணாக்கர்களும், இளைஞர்களும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நூலகம் தஞ்சை மாவட்ட காவல்துறையில் பொதுமக்களுடனான நல்லுறவில் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்தது என்று வெளியிடப்பட்டுள்ளது.