மாநாடு 7 September 2025
நேற்று 06.09.2025 தஞ்சை மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் த.கா.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பானது கடைப்பிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் விருப்பு வெறுப்பின்றி பணிபுரியவும், பணியாற்றும் போது சாவல்களை எவ்வாறு எதிர்கொள்வது
என்பதை பற்றியும் அறிவுரைகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் குறிக்கோளான “கனிவான வார்த்தை, உறுதியான அமலாக்கம்” என்பதனை அனைத்து காவலர்களும் பின்பற்றி செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் காவலர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் தோறும் பொதுமக்கள் காவலர் நல்லுறவு, கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருட்கள் மேற்கொள்ளப்பட்டது. ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.