மாநாடு 9 September 2025
தஞ்சை சரகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர்(303.478kg), திருவாருர்(208.7kg), நாகப்பட்டினம் (477.8Kg) மற்றும் மயிலாடுதுறை(9.586kg)ஆகிய மாவட்டங்களில்
பறிமுதல் செய்யப்பட்ட 999.0641kg கஞ்சாவை நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று 09.09.2025 தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.ஜியாவுல்ஹக் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு உட்கோட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள Medi-Care Enviro System என்ற நிறுவனத்தில் போதைப் பொருட்களை தீயிட்டு அழிக்கும் நிகழ்வானது நடைபெற்றது.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் த.கா.ப., சீர்காழி குற்றவியல் நீதித்துறை நடுவர் கைலாஷ் , மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் திருவையாறு உட்கோட்டம் துணைக்காவல் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு ஆகியோர்கள் உடனிருந்தனர். போதைக்கு தீ வைத்த காவலர்களின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.