Spread the love

மாநாடு 16 September 2025

ஒரே அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரசு அலுவலர்கள் பலர் அரசுக்கு இழப்பையும், பொதுமக்களுக்கு அலுப்பையும் ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை பலரும் பல அலுவலகங்களிலும் பார்த்திருப்போம் அதேபோல .

சார் – பதிவாளர் அலுவலகங்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் பட்டியலை அனுப்ப பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 587 சார் – பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு பணிகள் நடக்கின்றன. பணிகள் அதிகமாகும் அளவுக்கு பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் உள்ளது.
அழுத்தம் இருப்பினும் பெரும்பாலான அலுவலகங்களில் உதவியாளர்கள் சார் – பதிவாளர்கள் பணியில் அதிக அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வருகின்றன.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து அறிக்கை அளிக்கும் சார் – பதிவாளர்கள் மட்டும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். மேலதிகாரிகள் ஆசியுடன் செயல்படும் சார் – பதிவாளர்கள், உதவியாளர்கள் பலர், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடர்கின்றனர். அவர்கள் மீதான புகார்களும் மூடி மறைக்கப் படுகின்றன.
இந்நிலையில் ஒரே இடத்தில் நீண்டகாலமாக பணியில் இருப்போரை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து பதிவுத்துறைக்கு அழுத்தம் வந்துள்ளது. இதனால் இது தொடர்பான விபரங்கள் திரட்டப்படுகின்றன. இது குறித்து பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொது ஊழியர்கள் அரசு பணியாளர் விதிகளின் படி, ஒரு நபர் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. அதே போல ஒரே மண்டலத்தில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்பது விதி.
ஆனால் உதவியாளர்கள், சார் – பதிவாளர், மாவட்ட பதிவாளர்கள் என, 1,000 பேர், ஒரே அலுவலகத்தில் பல ஆண்டுகளாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.
குறிப்பிட்ட சிலர் ஒரே இடத்தில், 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பது தெரிய வந்துள்ளது. இது போன்ற நபர்கள் குறித்த விபரங்களை பட்டியலாக அனுப்ப அனைத்து டி.ஐ.ஜி.,க்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின் அவர்கள் மொத்தமாக மாற்றம் செய்யப்பட உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

84220cookie-checkஅரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் அதிகாரிகளின் பட்டியல் கணக்கெடுப்பு

Leave a Reply

error: Content is protected !!