மாநாடு 20 May 2025
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025 – 26ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்காக பயனாளிகள் தேர்வு தற்போது வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் ஒன்றியம், பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் அன்பழகன் என்பவர் தனக்கு வீடு கிடைக்காத ஆதங்கத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
நான் திமுக இருக்கிறேன். எனக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். தேர்தல் வந்தால் திமுக வேட்பாளருக்காக ஒண்ணாவது பட்டனில் போடு, இரண்டாவது பட்டனில் போடு என ஓட்டு போடுவதற்காக பிரசாரம் செய்து, ஓட்டு கேட்டு ஜெயிக்க வைத்தால், இப்போது என்னிடம் 30 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள் எப்படி இது? என்ன நியாயம் என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொத்தனார் வேலை செய்யும் குடிசை வாசியான இவரது வீடு மழை பெய்தால் ஒழுகும் என்பதால் கூரையின் மீது தார்பாயை போட்டு மூடி வைத்திருக்கிறார் திமுக ஆட்சியில் அதிகாரிகள் பஞ்சமில்லாமல் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே
அங்கு மட்டுமல்ல தமிழகத்தில் எங்குமே என்று சொல்லும் அளவிற்கு பல இடங்களிலும் கலைஞர் கனவு வீடு திட்டத்திற்கு பல வகைகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். இதற்குத் துணை போகும் அதிகாரிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் அதில் சிக்குபவர்களை பக்காவாக அவ்வப்போது வெளிப்படுத்தும் வேலையை மாநாடு செய்தி குழுமம் செய்யும்.