மாநாடு 24 May 2025
தஞ்சை மலர் வணிக வளாகம் முதலாம் ஆண்டு நினைவு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா யாகசாலை பூஜையுடன் மிகவும் விமர்ச்சியாக தொடங்கியது.
தஞ்சை – நாகப்பட்டினம் சாலை தொல்காப்பியர் சதுக்கம் அருகில் தஞ்சை மலர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த மலர் வணிக வளாகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தொடக்கத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக யாகசாலை பூஜை நடத்தப்பட்டது.
அப்போது பட்டீஸ்வரம் குருக்கள் கலந்து கொண்டு யாக சாலை நடத்தினர். அப்போது விவசாயம் செழிக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டும். பூ மற்றும் மாலைகள் வாங்குவதற்கு அதிக வாடிக்கையாளர்கள் வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதமான வேண்டுதல்கள் யாகசாலையில் குருக்கள்களால் போதிக்கப்பட்டது.
இந்த வணிக வளாகத்தில் உள்ள பூ மற்றும் மாலைகள் சில்லறை மற்றும் மொத்த விற்பனைகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை, நாகை திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் பூ மற்றும் மாலைகள் மொத்தமாகவும், சிலரையாகவும் வாங்கி சென்று பயனடையும் வகையில் பூ வியாபாரம் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் இங்கு 42 கடைகளில் வியாபாரம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த யாகசாலை நிகழ்ச்சிக்கு தஞ்சை மலர் வணிக வளாக கௌரவத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். தலைவர் சந்திரசேகர், செயலாளர் வேலாயுதம், பொருளாளர் சௌந்தரராஜன்,
துணைத் தலைவர் மகேஸ்வரன், துணைச் செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தஞ்சை பூக்காரத் தெருவில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக யாகசாலை தொடங்கியவுடன் கோவிந்தராஜ் நாதஸ்வர குழுவினர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி -N.செந்தில் குமார்.