மாநாடு 03 June 2025
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தென்னமநாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராம விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கம் மற்றும் உயர்கல்வி பள்ளியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி தாய் தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு நிரந்தரமான கல்வி தங்கள் பள்ளியில் இலவசமாக வழங்கப்படும் என அந்த பள்ளி தாளாளர் உறுதி அளித்தார். மேலும் எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் ஐ ஏ எஸ் அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், இன்ஜினியர்களாகவும் அரசு அலுவலகத்தினராக படித்து மேன் மெலும் வளர்ந்து இந்த பள்ளிக்குபெருமை சேர்த்துள்ளனர்.
அதேபோன்று வருகின்ற காலத்தில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு இலவசமாக படிப்பில் 100% வெற்றி பெற்று உயர பள்ளி ஆசிரிகள் மற்றும் ஸ்ரீ ராம விலாஸ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் உறுதுணையோடு,துணையாக இருப்போம் என அந்தபள்ளியின் தாளாளர் சிவ. ராஜேஷ் கண்ணா தெரிவித்தார்.
மேலும் ஜீன் .2ம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளை வரவேற்று அவர்களை படிப்பில் கவன செலுத்த ஊக்குவிக்கும் விதமாக நோட்டு புத்தகங்கள் வழங்கி அவர்களை வரவேற்றார்.
செய்தி – N.செந்தில் குமார்