மாநாடு 03 June 2025
தஞ்சாவூரில் சாலைகள் பாலைவனங்கள் போலவும், பள்ளத்தாக்குகள் போலவும் , மழை நேரங்களில் குளம், குட்டைகள் போலவும் இருப்பதை பயணிப்பவர்கள் அனைவரும் அறிவர்.
தஞ்சாவூர் கொடிமரத்து மூலை அருகில் சென்னை, கும்பகோணம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் செல்லும் முக்கிய சாலையில் பக்கத்து பக்கத்தில் இரண்டு டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது அதற்கு வெளியிலேயே பாதாள சாக்கடை பராமரிப்பு சீர் கேட்டால் மிகப்பெரிய பள்ளங்கள் பல நாட்களாக இருந்திருக்கிறது, அதனால் விபத்துகளும் தொடர்ந்து நடைபெறுமாம் அந்த நேரங்களில் மட்டும் தற்காலிகமாக மண்ணைப் போட்டு மூடுவது போல் பாசாங்கு செய்துவிட்டு சென்று வடுவார்களாம், அது சில நாட்களிலேயே பழைய நிலைக்கு வந்துவிடுமாம், அதைப்போல ஏறக்குறைய 10 நாட்களுக்கு மேலாக பெரிய பள்ளம் இரண்டு இடத்தில் இருந்திருக்கிறது அதில் சில விபத்துகளும் நடந்ததாக கூறப்படுகிறது அதைப்போல நேற்று இரவு கொடிமரத்து மூலையில் இருந்து கரந்தைச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றவரின் இருசக்கர வாகனம் டாஸ்மாக் கடை அருகில் இருந்த பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது இந்நிகழ்வு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளமாற பணியாற்றினால் ஊர் நன்றாக இருக்கும். ஏதோ வந்தவனுக்கு வந்தான் போனானுக்கு போனான் என்று பணியாற்றினால் ஊராரின் உயிர் தான் நாள்தோறும் அணு அணுவாக போகும் என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சான்றாக இருக்கிறது. விரைந்து சாலையை நிரந்தரமாக சரி செய்வார்களா சம்பந்தப்பட்டவர்கள் ? பொறுத்திருந்து பார்ப்போம்.