Spread the love

மாநாடு 16 July 2025

அலுவலர்களின் அலட்சியத்தால் ஆண்டு 21 கடந்தும் அழுகுரலும், தாய்மார்களின் கண்ணீரும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நாள் 16ந்தேதி ஜூலை மாதம் இந்நாள். இதே நாளில் தான் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் துடிதுடித்து இறந்த செய்தி திக்கெடடும் பரவியது .

இதயம் உள்ள நல்ல உள்ளங்கள் துடிதுடித்தது அதற்கு காரணம் ஊழியர்களின் அலட்சியமே என தெரியவந்தது. 

இது போன்ற பள்ளிகளை… முதலில் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக உள்ள அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர், தலைமை கல்வி அலுவலர், தனியார் பள்ளிகளுக்கு என்று உள்ள அலுவலர்கள் என பல்வேறு அலுவலர்கள் கண்காணிக்க திறம்பட பள்ளிகளை நடத்த, மக்களின் வரி பணத்தில் இருந்து ஊதியம் கொடுத்து அரசு அலுவலர்களை வைத்திருக்கும் போதும் சில அலுவலர்கள் தனது கடமை என்னவென்று தெரியாமல் அல்லது கடமையை செய்ய தவறி அலுப்புப்பட்டு கூட வேலையை செய்யாமல் இருப்பதால் இது போன்ற துயர சம்பவம் நடைபெற்றது. சமீபத்தில் கூட பட்டுக்கோட்டை அருகில் உள்ள பிரேம் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுத முடியாமல் போனதற்கு கூட காரணமாக இருந்தவரும் தஞ்சாவூர் மாவட்ட (தனியார் பள்ளி) கல்வி அலுவலர் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டார் என்கிற போதிலும் ஒரு மிகப்பெரிய கனவை சுமந்து படித்த குழந்தைகளின் கனவு?அக்குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்வை பட்டுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் எழுத வைக்க மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் எவ்வளவு சிரத்தை எடுத்தது என்பதை சமூகத்தின் மீது அக்கறை கொண்டு உற்று நோக்கியவர்கள் அனைவரும் நன்கறிவார்கள். இது போன்ற அவல நிலை இனி தொடராமல் இருப்பதற்கு அரசு அறிவுறுத்தி இருக்கிற நிலையில் தனியார் பள்ளிகள் உட்பட நடைபெறுகிறதா என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாத அலுவலர்கள் அப்பணியில் இருப்பதற்கு அருகதை அற்றவர்கள் என்கிறது சட்டம் இதனை உணர்ந்து இனி பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவை பள்ளிகள் மீறாமல் சட்டத்தை மதித்து நடக்கிறார்களா என்பதையும், மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல உடல் ஆரோக்கியமும் முக்கியம் என்றுள்ளதையும் அனைத்து விதிகளையும் பின்பற்றி பள்ளிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியதே இந்நாளில் இறந்து போன 94 குழந்தைகளுக்கும் நாம் செலுத்தும் உண்மையான கண்ணீர் அஞ்சலியாக இருக்கும்.

மரணித்த குழந்தைகளுக்கு மாநாடு செய்தி குழுமத்தின் கண்ணீர் வணக்கம்.

82560cookie-checkகும்பகோணம் பள்ளி 94 குழந்தைகள் மரணம் சோகம் இனி தொடர கூடாது.

Leave a Reply

error: Content is protected !!