மாநாடு 2 September 2025
ஒவ்வொரு உயிரும் உன்னதமானது உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உயிருள்ளவரை துயரானது மரணம் . அதிலும் விபத்து மரணம் என்றால் பெருந்துயரம் . ஒரு ஊழியர் கவனமாக கடமையை செய்யாமல் அலட்சியமாக இருப்பதனால் ஏற்படும் மரணத்திற்கு பாரதிய நியாய சன்கீதா பிரிவு 106ல் தண்டனை கொடுக்க முடியும் என்கிறது.
பல பகுதிகளிலும் பயணிக்கும் போது நாம் சாலையில் பெரிய பள்ளங்கள் இருப்பதையும், வேகத்தடை இருக்க வேண்டிய இடத்தில் வேகத்தடை இல்லாமல் விபத்து ஏற்படக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதையும் கண்டிருப்போம் அதன் விளைவுகள் விபரீதமாக இருப்பதை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அதிகமாக உணர்ந்து இருப்பார்கள் இதேபோல ஒரு நிலை தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கரகாரம் கடைத்தெருவில் கடை நடத்தி வந்த முருகேசன் என்பவரின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 18-8-2025 அன்று மதியும் 2 மணியளவில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவரின் கடையின் அருகிலேயே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதியதில் கீழே விழந்து விபத்து
ஏற்பட்டிருக்கிறது. மோதிய அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான முருகேசன் என்பவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது, சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 26-8-2025 அன்று மரணம் அடைந்திருக்கிறார்.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் சாதாரணமாகவே இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கைதான் ஏனென்றால் வாகனங்கள் அதிவேகத்தில் வருகிறது அதன் வேகத்தை குறைப்பதற்கு வேகத்தடைகள் இல்லாததே முதன்மையான காரணம் என்கிறார்கள் பல தெருமுனைகள் ஒன்று கூடுகிறது, அதேபோல இந்த சாலையில் போக்குவரத்துகள் அதிகமாக இருக்கிறது, மக்கள் நடமாட்டமும், எந்நேரமும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் வெகுவாக சாலைகளில் சுற்றுவதால் இனியும் அலட்சியம் காட்டாமல் அலுவலர்கள் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள் . விரைந்து செயல்பட்டு வேகத்தடை அமைத்து விபத்துக்களை தடுப்பார்களா ?