மாநாடு 1 June 2022
கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி என்கிற 52 வயது உடைய பெண் ஆசிரியை அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் இவரின் அலைபேசிக்கு கடந்த 11ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது தொடர்பை எடுத்தவுடன் எதிர் முனையில் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாக வங்கி அதிகாரி என்று ஒரு நபர் பேசத் தொடங்கியிருக்கிறார் அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த ஆசிரியை கலைமணி அழைப்பை துண்டித்து விட்டு வீட்டில் தனது செல்போனை வைத்து விட்டு வெளியே சென்றிருக்கிறார்.
அந்த சமயத்தில் தனது அம்மாவின் செல்போனுக்கு வங்கியிலிருந்து அனுப்பப்பட்டதாக அனுப்பப்பட்ட போலி இணைப்பை கிளிக் செய்து அவர்கள் கேட்ட தகவல்களையும், ஓடிபியையும் ஆசிரியையின் மகள் பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக ஆசிரியை கலைமணி சென்றிருக்கிறார் அப்போது தான் ஏற்கனவே தனது வங்கி கணக்கில் இருந்து 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பறி போய் இருப்பது தெரியவந்திருக்கிறது அதனைத் தொடர்ந்து கரூர் சைபர் க்ரைம் காவல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது அதன்படி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கித் துறையும் காவல் துறையும் பலமுறை வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றபோதும் சிலரின் கவனக்குறைவால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.