மாநாடு 11 June 2022
சென்னையை சேர்ந்த விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் இரண்டு கல்லூரி மாணவர்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றி பார்ப்பதற்காக இன்று விடியற்காலை 3 மணி அளவில் சென்னையில் இருந்து தங்களது மஞ்சள் நிற புல்லட்டில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு இன்று மாலை 4 மணி அளவில் பெரிய கோவிலுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு, புகைப்படங்களை எடுத்து விட்டு, கல்லூரி மாணவர்களான சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த நிதின் என்பவரும், சென்னை போரூரை சேர்ந்த சுதர்சன் என்பவரும் ,பரிசுத்தம் ஹோட்டல் அருகே உள்ள புது ஆற்றில் இன்று மாலை 6 மணி அளவில் இறங்கி குளித்து இருக்கிறார்கள், அப்போது இருவருக்குமே நீச்சல் தெரியாத காரணத்தாலும், ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருப்பதாலும், நீரில் இழுக்கப்பட்டு இருவருமே தண்ணீரில் தத்தளித்து இருக்கிறார்கள் , அருகில் இருந்த இளைஞர் ஆற்றில் குதித்து சுதர்சன் என்கிற மாணவரை கயிற்றைப் போட்டு காப்பாற்றிவிட்டார். ஆனால் நிதின் என்கிற மாணவர் கிடைக்கவில்லை, காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் ஆற்றில் தேடும் பணியில் இருக்கிறார்கள். இந்த நிகழ்வால் தஞ்சாவூர் பரபரப்பாகியுள்ளது.