Spread the love

மாநாடு 8 May 2022

பாஜகவை வளர்ப்பதே திமுக தான் என்றும் திமுக ஆட்சிக் காலங்களில் தான் பாஜக தமிழகத்தில் மாபெரும் வளர்ச்சி பெறும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அதனை மெய்ப்பிக்கும் விதமாக திமுகவில் இருந்து பல முக்கிய புள்ளிகளும் பாஜகவில் அவ்வப்போது இணைவதை அனைவரும் அறிவார்கள் .

இதில் புதிதாக தற்போது இணைந்திருப்பவர் திமுகவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்து இருக்கிறார் .

அவர் பல குற்றச்சாட்டுக்களையும் திமுக மீது வைத்துள்ளார் அவர் குறிப்பிட்டிருப்பதாவது : தான் 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் இருந்து வருகிறேன், எனது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் திமுகவில் தரப்படவில்லை அதுமட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கே பொறுப்புகள் பதவிகள் தரப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திமுகவினர் சொல்கிறபடி ஜனநாயகம் என்பது சுத்தமாக திமுகவில் கிடையாது. உண்மையில் சொல்லப்போனால் பாஜகவில் தான் ஜனநாயகம் உள்ளது திமுகவில் சாதி பார்த்து தான் பொறுப்புகள் உட்பட சீட்டுகள் வரை கொடுக்கப்படுகின்றது ஆனால் பாஜகவில் அப்படியல்ல தமிழகத்தில் உறுதியாக பாஜக ஆட்சி அமையும் என்று கூறினார்.

34080cookie-checkசோழமண்டலத்தில் பரபரப்பு திமுகவின் முக்கிய புள்ளி பாஜகவில் இணைகிறார்

Leave a Reply

error: Content is protected !!