மாநாடு 16 May 2022
தமிழ்நாட்டில் பின்னலாடை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள் அதில் கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் பங்கேற்கின்றன இதனால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது, அதன் காரணமாக 2000 கோடி ரூபாய் நட்டம் என்று கூறப்படுகிறது ,விலை ஏற்றத்தினால் பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது :
பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள், ஜவுளி நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெருமளவில் இழப்பு ஏற்பட்டதால் பல ஜவுளி நிறுவனங்கள் ஏற்கனவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. பருத்தி வாங்க நூற்பாலைகள் வாங்கும் கடனை திருப்பி செலுத்த 3 மாத காலம் அவகாசம் என்பதை 8 மாதமாக நீடிக்க வேண்டும் என்றும் நூற்பாலைகளிடமிருந்து வங்கிகள் பெறும் வைப்பு தொகையை 25 விழுக்காட்டிலிருந்து இருந்து 10 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை, கோவை மற்றும் கரூரில் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது. கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி முடங்கியுள்ளது வேலை நிறுத்தம் காரணமாக ஜவுளி உற்பத்தி முடங்கியதால் ரூ.2,000 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது