மாநாடு May 2022
முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் இருந்த பேரறிவாளன் தற்போது உச்ச நீதிமன்றத்தால் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் இது அவரின் விடுதலைக்காக போராடிய வழக்கறிஞர்கள், சமூக போராளிகள், அரசியல் களத்தில் நின்று போராடியவர்கள் என பலரையும் மகிழ்வித்து இருக்கிறது. அந்த வழக்கு கடந்து வந்த பாதையை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருந்த பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருந்தார்
2014 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது என்று சுட்டிக்காட்டி 2014 ஆம் ஆண்டு இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த வழக்கானது நான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் அதை வைத்துதான் அந்த படுகொலை நடத்தப்பட்டது என்று என் மீது வழக்கு புனைந்து இருக்கிறார்கள் ஆனால் நான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்பதற்கும் அந்த பேட்டரியால் தான் அந்த குண்டை வெடிக்க வைத்து படுகொலை செய்தார்கள் என்பதற்கும் இதுவரையிலும் எந்தவத ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் முழுமையாக சமர்ப்பிக்கவில்லை எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்தார் அதன் பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். கடந்த சில வாரங்களாக வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 11ம் தேதி விசாரணை முடிந்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் இன்று காலை 10.30 மணியளவில் பேரறிவாளனை இந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது .