Spread the love

மாநாடு 25 May 2022

தமிழகத்தில் பல ஊர்களில் வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சாலை ஓரங்களில் பல கடைகள் அமைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் .இவர்களிடம் எந்த மாவட்ட நிர்வாகமும் எந்தவித அடையாள அட்டையையும் இதுவரை பெற்றதாக தெரியவில்லை ,இவர்கள் ஏதாவது ஒரு குற்றத்தில் ஈடுபட்டாலும் கூட அவர்களை கண்டறிவது மிகவும் கடினமாக பல வழக்குகளில் இருப்பதை செய்திகள் வாயிலாக பல நேரங்களில் அறியமுடிகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் அடையாள அட்டையை கொடுத்து அவர்களிடமிருந்து சரியான தகவல்களைப் பெற்று அவர்களை இங்கு அனுமதித்தால் மட்டுமே பல குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியும் ,இவர்கள் யாரேனும் குற்றத்தில் ஈடுபட்டால கூட கண்டுபிடிக்க முடியும் .

ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு கிராமத்தை சேர்ந்த சந்திரா என்கிற மீனவப் பெண் கடல் பாசி சேகரிப்பதற்காக சென்றிருக்கிறார் அப்போது அங்கு இறால் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் அந்தப் பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இறால் பண்ணை அருகிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சந்திராவின் உயிரற்ற உடல் கிடைக்கப் பெற்றிருக்கிறது அதில் சந்திராவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது, கொலையை மறைப்பதற்காக உடலை கொலையாளிகள் தீ வைத்து கொளுத்தி இருக்கிறார்கள். தகவலறிந்து வந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சந்தேகத்தின் பெயரில் வடமாநிலத்தை சேர்ந்த ஆறு இளைஞர்களையும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் தான் இந்த படு கொலையை யார் செய்தார்கள் என்பது தெரியவரும்.

இந்த நிலையில் சந்திராவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து கொலையாளிகளை உடனடியாக காவலர்கள் கைது செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

36190cookie-checkபெண் கூட்டு பாலியல் படுகொலை உறவினர்கள் சாலை மறியல் பரபரப்பு
One thought on “பெண் கூட்டு பாலியல் படுகொலை உறவினர்கள் சாலை மறியல் பரபரப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!