Spread the love

மாநாடு 30 July 2022

தமிழ்நாட்டில் வருகின்ற 5 நாட்களுக்கு கனமழை பொழிய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நிலவுகின்ற கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றிலிருந்து 5 நாட்கள் கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது.

அதன்படி இன்று தமிழ்நாடு காரைக்கால் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமான மழை பொழியலாம்.அதைப்போல நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பொழியலாம்.

31ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பொழியலாம்.

ஆக 1ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிய கூடும்.திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பொழிய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைப் பொழிய வாய்ப்புள்ளது.

ஆக 2ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழியலாம்.திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக பணம் மழை பொழிய வாய்ப்புள்ளது. சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழியலாம். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பொழிய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பொழியலாம். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பொழியலாம். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை  27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு சென்டிமீட்டரில்: பெரியகுளம் தேனி 15, வைகை  அணைக்கட்டு தேனி 9, சின்னக்கல்லார்  கோயம்புத்தூர், தானிஷ்பேட்டை ,சேலம் தலா 3, மேட்டூர் ,சேலம், தர்மபுரி, மலையூர் புதுக்கோட்டை, ஓசூர்  கிருஷ்ணகிரி தலா 2, ஆலங்குடி  புதுக்கோட்டை, கோயம்புத்தூர்  தெற்கு, ஓமலூர்  சேலம், பாலக்கோடு  தர்மபுரி, கோயம்புத்தூர், வால்பாறை  கோயம்புத்தூர் தலா 1 செ.மீ மழையும் பதிவானது.

மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அதன்படி

30.07.2022: இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்,

31.07.2022: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

31.07.2022 முதல் 03.08.2022 வரை: லட்சத்தீவு பகுதிகள், கேரள, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

01.08.2022 முதல் 03.08.2022 வரை: மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

02.08.2022: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இந்த5 நாட்களும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது.

46000cookie-checkஇடியுடன் கனமழை பொழியலாம், அதிக காற்று வீசக்கூடும் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!