Spread the love

மாநாடு 13 May 2022

கே என் நேரு மக்களைப் பாதிக்காத வகையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறியதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிறிய கட்டண உயர்வு இருந்தாலும் கூட மக்களால் தாங்க முடியாது இந்நிலையில் மக்களை பாதிக்காத பேருந்து கட்டண உயர்வு என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருப்பதன் பொருளை புரிந்து கொள்ள முடியவில்லை

பேருந்து கட்டணம் கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் இந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு கூறுகிறார்.

ஏன் இந்த குழப்பம்? வரலாறு காணாத பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நேரத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை மக்களால் தாங்க முடியாது. கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

34840cookie-checkபஸ் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!