முதல்வர் பொதுபாதை அமைத்து தர வேண்டும்
ஆதித்தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாட்டு பொது பாதையை பயன்படுத்துவதற்கான தடையை நீக்கி உடலை எடுத்து செல்ல நிலையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை குற்றங்களை தடுக்க தவறிய போளூர் காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாகவும், முழுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் .
உள்ளிட்ட 9அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருந்ததியர் மக்களுக்கு உடனடியாக அவர்களுக்கு உடல்களை எடுத்து செல்ல பொதுபாதை அமைத்து தர வேண்டும். அதேபோல் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தொடர்ச்சியாக நடந்தேறிய அருந்ததியர் மக்களின் படுகொலைக்கு நீதியும் உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
எங்களது கோரிக்கையை உடனடியாக தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் தோழமை கட்சிகளோடு இணைந்து மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.