மாநாடு 13 July 2022
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைக்கேற்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு அறிந்தார், அவர்களின் மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அந்தந்த அதிகாரிகளை இந்த மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதன் பின் பேசிய மாவட்ட ஆட்சியர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் வேலைகள் வழங்க வேண்டும், ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களின் குடியிருப்பு அருகிலேயே எளிய வேலைகள் வழங்க வேண்டும், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன். இந்த செயலை மனிதாபிமானம் உள்ள அனைவரும் வரவேற்கிறார்கள்.